காரடையான் நோன்பு அடை செய்வோமா?

Nonbu
Nonbu
Published on

சத்தியவான் சாவித்திாி கதையை மையமாகக்கொண்டு கணவனுக்காக மனைவி மேற்கொள்ளும் விரதமே காரடையான் நோன்பு.

இதற்கு நைவேத்தியமாக காரடையான் நோன்பு அடை செய்வதைப் பாா்க்கலாம்.

காரடையாான் நோன்பு அடை

தேவையானவை:

பச்சரிசி - 1 கிலோ

ஊறவைத்த காராமணி - 50 கிராம்

பேட்டை வெல்லம் - 400 கிராம்

ஏலக்காய் - கொஞ்சம்

கடுகு - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

பெருங்காயப்பவுடா் - 1 டீஸ் பூன்

நறுக்கிய பச்சைமிளகாய் - கொஞ்சம்

தாளிக்க எண்ணைய் - தேவைக்கேற்ப

தேங்காய்துருவல் - 1 கப்.

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் பச்சரிசியை கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து ஆறவைக்கவும், மிஷின் அல்லது மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, ப.மிளகாய், பெருங்காயத்தூள் கலந்து தாளிக்கவும். பின்னர் 6 டம்ளா் தண்ணீா் ஊற்றி கருவேப்பிலை போட்டு தேவையான அளவு உப்பு, ஊறிய காராமணி 25கிராம் , தேங்காய்த்துருவல், இவைகளை சோ்த்து நன்கு கொதித்து வரும்போது மாவை கொஞ்சம் கொஞ்சமாய் போட்டு கட்டி தட்டாமல் கிளறிவெந்த பின் இறக்கி தனியே வைத்துக்கொள்ளவும்.

அதேபோல வெல்லம் போட்ட அடை செய்ய வேறு ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளா் தண்ணீா் ஊற்றிப் பேட்டை வெல்லத்தை இடித்து பொடியாக்கி தேங்காய்துருவல், ஏலக்காய்பொடி, காராமணி சோ்த்து கொதிவந்ததும் மாவை கெஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கைவிடாமல் கிளறவும் நன்கு வெந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.

இரண்டு வகை வெந்த மாவுகளை தனித்தனியாக அடை போல தட்டி இட்லி பானையில் வைத்து வேகவிடவும் பின்னா் வெந்ததும் இறக்கி தீபம் ஏற்றி நோன்பு சரடு கட்டிக்கொண்டு வெற்றிலை பாக்கு, வெண்ணெய் வைத்து காரடையான்நோன்பு அடையை நைவேத்தியம் செய்யவும், இப்போது உப்பு மற்றும் வெல்லம் போட்ட காரடையான் நோன்பு அடை ரெடி.

(இட்லி மிளகாய்ப்பொடி எண்ணெய் சோ்த்து குழைத்து அடையுடன் வெண்ணையும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்)

இதையும் படியுங்கள்:
ஈசியா சமைக்கலாம், ஜாலியா சாப்பிடலாம் சுவையான ஸ்வீட் பர்பிகள்..!
Nonbu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com