காரடையான் நோன்பு இனிப்படை மற்றும் உப்படை செய்யலாம் வாங்க!

காரடையான் நோன்பு அடை...
காரடையான் நோன்பு அடை...

ன்றைய தினம் திருமணம் ஆன பெண்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று விரதம் இருப்பார்கள். அந்த நோன்பிற்காக வீட்டில் வெல்ல அடையும், உப்பு அடையும் அரிசி மாவு மற்றும் காராமணி சேர்த்து செய்து அத்துடன் வெண்ணெய் வைத்து பூஜை செய்து மஞ்சள் சரடு கட்டிக்கொண்ட பிறகு அடையை சாப்பிட்டு பெண்கள் தங்கள் விரதத்தை முடிப்பார்கள். இப்போ வாங்க அடை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்;

காராமணி- ½ கப்.

வெல்லம்-1கப்.

அரிசி மாவு-2 கப்.

ஏலக்காய்-1/2 தேக்கரண்டி.

தேங்காய் துருவல்-1/4கப்.

நெய்- 1தேக்கரண்டி.

உப்படை செய்ய தேவையான பொருள்:

கடுகு-1/2 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிது.

துருவிய இஞ்சி-1/4 தேக்கரண்டி.

விதை நீக்கிய பச்சை மிளகாய்- சிறிது.

பெருங்காயத்தூள்- தேவையான அளவு.

துருவிய தேங்காய்-1/4கப்.

காரடையான் நோன்பு அடை செய்முறை விளக்கம்:

முதல் நாளே ½ கப் காராமணியை நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஊறிய காராமணியில் 1கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

இப்போது 1 கப் வெல்லம் ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதில் 1 ½ கப் சுடுத்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். ஒரு ஃபேனில் 2 கப் அரிசி மாவை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கிண்டி இறக்கி விடவும்.

ஒரு ஃபேனில் வெல்ல தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்ல தண்ணீர் கொதிக்க ஆரமித்ததும் ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள், வேக வைத்திருக்கும் காராமணியில் பாதி, ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும். வெல்ல தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு 1 கப் வறுத்து வைத்த அரிசி மாவை போட்டு நன்றாக கிண்டவும். பிறகு 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கொள்ளவும். மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

மாவு நன்றாக ஆறியதும், கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு கொஞ்சம் மாவை எடுத்து நன்றாக தட்டி நடுவிலே சிறிதாக ஓட்டை போட்டு கொள்ளவும். இப்போது இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி விட்டு தட்டி வைத்திருக்கும் அடையை வைத்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். இப்போது காரடையான் நோம்பு இனிப்பு அடை தயார்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு இயற்கையான முறையில் ஃபேஷியல்கள் செய்வது எப்படி?
காரடையான் நோன்பு அடை...

அடுத்து உப்பு அடை செய்ய ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகு ½ தேக்கரண்டி, கருவேப்பிலை கொஞ்சம், துருவிய இஞ்சி ¼ தேக்கரண்டி, விதை நீக்கிய பச்சை மிளகாய் சிறிது சேர்த்து நன்றாக கிண்டவும். இதில் 1 ½ கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நல்ல தாராளமாக பெருங்காயத்தூளை சேர்த்து கொள்ளவும். அத்துடன் மீதி வைத்திருந்த காராமணி, தேவையான அளவு உப்பு , ¼ கப் தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அரிசி மாவு1 கப்பை சேர்த்து நன்றாக கிண்டவும். மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு வந்த பிறகு கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு சிறிது மாவை எடுத்து கையில் வைத்து நன்றாக தட்டி நடுவிலே சின்ன ஓட்டை போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும். அவ்வளவுதான் உப்படை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com