உப்பு புளி தோசை
உப்பு புளி தோசைwww.youtube.com

அசத்தலான ருசியில் கர்நாடகா ஸ்பெஷல் உப்பு புளி தோசை!

Published on

து சாதாரண தோசையை விட ருசியில் வித்தியாசமாக இருக்கும். நாவிற்கு உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என எல்லா வகையான ருசியும் தெரியும். அசத்தலான ருசியில் இருக்கும் இதனை செய்வதும் எளிது.

பச்சரிசி ஒரு கப் 

கெட்டி அவல் 1/2 கப் 

உப்பு தேவையானது 

புளி சின்ன எலுமிச்சை அளவு 

மிளகாய் எட்டு 

தனியா ஒரு ஸ்பூன் 

சீரகம் 1/2 ஸ்பூன் 

தேங்காய்த் துருவல் 1/2 கப் 

மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் 

சின்ன வெங்காயம் 

(விருப்பப்பட்டால்)  6 

கறிவேப்பிலை சிறிது

வெல்லம் 2 ஸ்பூன்

புளி சேர்ப்பதால் அரைத்தவுடன் தோசை வார்க்கலாம். தோசை மிருதுவாக வருவதற்கு அரை கப் கெட்டி அவலை தனியாக ஊற வைக்கவும். பச்சரிசி 2 மணி நேரம் ஊறியதும், அத்துடன் உப்பு, சின்ன எலுமிச்சை அளவு புளி, கெட்டி அவல், மிளகாய், தனியா, சீரகம், தேங்காய் துருவல், தோல் உரித்த சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், கருவேப்பிலை, வெல்லம் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்காமல் நைஸ் ரவையாக அரைத்தெடுக்கவும்.

இதனை தோசைக்கல் சூடானதும் தோசையாக வார்த்து எடுக்க உப்பு புளி காரம் இனிப்பு என எல்லா வகையான சுவையுடன் சூப்பராக இருக்கும். இரு பக்கமும் பொன் கலரில் வெந்ததும் வெண்ணை ஒரு ஸ்பூன் சேர்த்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும் இந்த கர்நாடகா ஸ்பெஷல் தோசை.

இதையும் படியுங்கள்:
ஊர் பேசும் பட்சணங்கள்! கொஞ்சம் ஹெல்த்தி! செம்ம்ம டேஸ்ட்டி!
உப்பு புளி தோசை

இதையே இட்லியாகவும் வார்க்கலாம். இட்லியாக வார்த்து ஆறியதும் கையால் உதிர்த்துக் கொண்டு வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஒன்று, கருவேப்பிலை சிறிது, பெருங்காயத்தூள் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு தாளித்து உதிர்த்த இட்லியை போட்டு கிளறி சிறிது தேங்காய் பூ சேர்த்து விட ருசியான உப்புமா ரெடி. இதனை பிரேக் பாஸ்ட், டின்னருக்கு சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் என எதுவும் தேவை இருக்காது.

logo
Kalki Online
kalkionline.com