ஆரோக்கியமும் சுவையும் சேர்ந்த கவுனி அரிசி பொங்கல்.. வேற லெவல் டேஸ்ட்!

Karuppu Kavuni Arisi Pongal in Tamil.
Karuppu Kavuni Arisi Pongal in Tamil.

கருப்பு கவுனி அரிசியில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி எப்படி சுவையான பொங்கல் செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி - 1 கப்

வெல்லம் - 2 கப்

உலர் திராட்சை - 20

பால் - 2 கப்

பாசிப்பருப்பு - ¼ கப்

ஏலக்காய் பொடி - ½ ஸ்பூன் 

தேங்காய் - ½ கப்

நெய் - 100ml

முந்திரி பருப்பு - 15

பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

செய்முறை

முதலில் கருப்பு கவுனி அரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். ஏனெனில் இது சாதாரண அரிசியைப் போல விரைவாக வேகாது. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதேபோல பாசிப்பருப்பையும் கடாயில் வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். இது நன்கு கொதித்ததும் அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து வேக வைக்க வேண்டும். நீங்கள் குக்கரில் செய்வதாக இருந்தால் குறைந்தது 8 விசில் விட்டு இறக்குங்கள். அரிசி பாதி வெந்ததும் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். இல்லையேல் பருப்பு முழுமையாக வெந்து பொங்கல் குழைந்துவிடும்.

அரிசியும், பருப்பும் வெந்ததும் அதில் வெள்ளத்தை சேர்த்து கிளற வேண்டும். வெள்ளத்துடன் அரிசி மற்றும் பருப்பு சேர்ந்து நன்கு குழைய வேண்டும். பின்னர் தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றுடன் சேர்த்து நெய்யில் வறுத்து எடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
கர்நாடகா ஸ்பெஷல் அரிசி பூரி, யாழ்ப்பாண ஸ்பெஷல் சம்பல் செய்வோமா?
Karuppu Kavuni Arisi Pongal in Tamil.

அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும் அதில் கொஞ்சமாக நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறுங்கள். பின்னர் அதில் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சை, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு நெய் மீதமிருந்தால் அதையும் சேர்த்து விடுங்கள். 

இறுதியில் பச்சை கற்பூரத்தை சேர்த்து நன்கு கலந்துவிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுவையான கருப்பு கவுனி அரிசி பொங்கல் தயார். இது நாம் சாதாரணமாக செய்யும் சர்க்கரை பொங்கலை விட சுவை சூப்பராக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு இதை முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com