வாரணாசியில் அமைந்துள்ள Kashi Chaat Bhandar, 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுவையான தெரு உணவுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு சிறிய உணவகம். குறிப்பாக, Tamatar Chaat மற்றும் Chura Matar போன்ற உணவுகளுக்குப் புகழ் பெற்றது. சமீபத்தில் நடந்த ஆனந்த் அம்பானி திருமணத்தில் இந்த உணவகத்தின் உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவுகள் அப்படி என்ன ஸ்பெஷல்? வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
வரலாறு: Kashi Chaat Bhandar 1950-களில் Pandit Radhey Lal Gupta என்பவரால் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் ஒரு சிறிய கடையாக இருந்து, சில எளிய தெரு உணவுகள் விற்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் Radhey Lal Gupta-வின் தனித்துவமான சமையல் திறமை மற்றும் புதுமையான உணவு வகைகள், அந்த கடை விரைவில் பிரபலமாக உதவியது.
அங்கு கிடைக்கும் சில பிரபல உணவுகள்:
Kashi Chaat Bhandar-ல் பல்வேறு வகையான சுவையான தெரு உணவு வகைகள் கிடைக்கின்றன. அவற்றில் பிரபலமானவை என்று பார்த்தால்:
Tamatar Chaat: வருத்த உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சாட் உணவாகும்.
Chura Matar: பருப்பு, பச்சை பட்டாணி, வெங்காயம் மற்றும் சில மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த உணவு, இந்த கடை அமைந்திருக்கும் வாரணாசி பகுதியில் மிகவும் பிரபலமானது.
Aloo Tikki Chaat: வருத்த உருளைக்கிழங்கு, தயிர், சட்னி மற்றும் தனித்துவமான மசாலா பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த சாட் ஐட்டம், சாப்பிட வேற லெவல் சுவையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
Papdi Chaat: மொறுமொறுப்பான அப்பளம், தயிர், சட்னி, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களின் கலவையில் இந்த தெரு உணவு தயாரிக்கப்படுகிறது.
Dahi Poori: பானிபூரி, தயிர், சட்னி, பச்சை மிளகாய் மற்றும் சில கலவைகளைப் பயன்படுத்தி இந்த பிரபலமான சிற்றுண்டி செய்யப்படுகிறது.
தெரு உணவு கலாச்சாரம்: வாரணாசியில் தெரு உணவுக் கலாச்சாரம் மிகவும் பிரபலமானது. நகரம் முழுவதும் இத்தகைய கடைகளை நீங்கள் அதிக அளவில் பார்க்கலாம். அவை சுவையான மலிவான உணவுகளுக்கு பெயர் போனவை. Kashi Chaat Bhandar கடை இந்த கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது தலைமுறை தலைமுறையாக உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சுவையான உணவுகளை வழங்கி வருகிறது.
இதன் பிரபலத் தன்மையை உணர்ந்தே அம்பானி வீட்டு திருமணத்தில், இந்த கடையின் பிரபலமான உணவுகள் பரிமாறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இத்துடன், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான பிரபல உணவுகளும் பகிரப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.