காசி அல்வா!

காசி அல்வா
காசி அல்வா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-சௌமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள் :

துருவிய வெள்ளைப் பூசணிக்காய் - 1கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 6

பாதாம் - 6

உலர்ந்த திராட்சை - 10

சர்க்கரை - 1/2 கப்

குங்குமப்பூ - சிறிதளவு

ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள்- 1/2 டீ ஸ்பூன்

வெள்ளரி விதை - 20

காசி அல்வா
காசி அல்வா

செய்முறை:

வெள்ளைப் பூசணிக்காயை விதைகளையும்,தோலையும் நீக்கி, மெல்லிசாக துருவி குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், நெய் ஊற்றி முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சையை லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் பூசணி, சர்க்கரை, குங்குமப்பூ, ஆரஞ்ச் கலர் அனைத்தையும் ஒன்றொன்றாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

கலவை கெட்டியான பின், நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய் மேலே மிதந்தவுடன் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி,  ஏலக்காய்த்தூள், நட்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து கடைசியாக வெள்ளரிவிதை தூவி ஒருமுறை கிளறினால், சுவைமிகு காசி அல்வா ரெடி

logo
Kalki Online
kalkionline.com