கத்திரி இலை பொடி, சட்னி மற்றும் கடையல்!

கத்திரி இலை...
கத்திரி இலை...

த்திரிக்காயில் பலவகை உண்டு. என்றாலும் எல்லாவித கத்திரிக்காயிலும் எல்லாவிதமான உணவு வகைகளையும் தயாரிக்க முடியும். ஆனால் கத்திரியிலையில் தயாரிக்க முடியுமா? என்று எல்லோருக்கும் தெரியாது. முடியும் அதனைப் பற்றிய ரெசிபிக்களை இதில் காண்போம்! 

கத்திரி இலை பொடி

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்திரி இலை- ஒரு கைப்பிடி

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா- 2 கைப்பிடி

பூண்டு, புளி, உப்பு- தேவையான அளவு

வர மிளகாய் -எட்டு

பெருங்காயம் -சிறிதளவு

மல்லி விதை -ஒரு ஸ்பூன் 

சீரகம் -ஒரு ஸ்பூன்

எண்ணெய்  வறுக்க -தேவையான அளவு

செய்முறை:

தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கத்தரி பிஞ்சு இலைகளை வதக்கி வைத்து விட வேண்டும். பிறகு பூண்டு, புளியையும் எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்து விட வேண்டும். மற்றுமுள்ள பருப்பு வகைகள், சீரகம், மல்லி விதை அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்க வேண்டும். கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பொடித்து ஆறவிட்டு பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் இந்த பொடியை சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். அதிகமாக எந்த வித்தியாசமும் தெரியாது.

சட்னி

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் பிஞ்சு இலைகள்- ஒரு கைப்பிடி

தேங்காய் துருவல் -அரை கப்

வர மிளகாய்- ஐந்து

பெரிய வெங்காயம் அரிந்தது- ஒன்று

தக்காளி -அரைபாதி 

கடலை பருப்பு -ஒரு ஸ்பூன்

உப்பு எண்ணெய் -தேவைக்கு

கத்திரிக்காய் பிஞ்சு இலைகள்
கத்திரிக்காய் பிஞ்சு இலைகள்

செய்முறை:

மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் எண்ணெயில் வதக்கி, ஆறவிட்டு அப்படியே அரைத்து கடுகு தாளிக்க வேண்டியதுதான். தாளிக்காமல் இருந்தாலும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் என்றென்றைக்கும் பிறரால் மதிக்கப்பட வேண்டுமா?
கத்திரி இலை...

கடைசல்:

கத்திரி செடியின் பிஞ்சு இலை- இரண்டு கைப்பிடி அளவு 

சின்ன வெங்காயம்- 10

தக்காளி -2 

பச்சை மிளகாய்- ஐந்து 

பூண்டு பற்கள்- மூன்று

சீரகம்- ஒரு ஸ்பூன்

உப்பு -தேவைக்கு

செய்முறை:

த்திரி இலையை பொடிதாக அரியவும். சின்ன வெங்காயம், பூண்டு பல், பச்சை மிளகாய், போன்ற வற்றை சுத்தம் செய்து பொடிதாக நறுக்கவும். தக்காளியையும் பொடிசாக  நறுக்கி   சீரகம் உட்பட எல்லாவற்றையும் மண்சட்டியில் போட்டு, தேவையான அளவு நீர் விட்டு, நன்கு வேக விட்டு அப்படியே கடைந்து உப்பு சேர்க்கவும். இதை நல்லெண்ணெய் அல்லது நெய்யு டன் சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட தோல் வியாதிகள் விலகும். 

பிஞ்சு கத்திரி இலைக்கு தோல் வியாதியை குணமாக்கும் இயல்பு உண்டு. ஆதலால் இதை பொடி, சட்னி ,கடையல் என்று செய்து சாப்பிடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com