நம் முன்னோர்கள் கீரைகளின் மருத்துவ பண்புகளை அறிந்து பல நூற்றாண்டுகளாக உணவில் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக, கீரைகளை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது தமிழ் மக்களின் உணவுப் பழக்கத்தில் இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்றைய அவசர உலகில் பலர் தங்களது உணவுப் பழக்கத்தை கவனிக்காமல் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழலில், கீரை சாதம் போன்ற பாரம்பரிய உணவுகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
பாசிப்பருப்பு - 1 கப்
அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி, போதுமான அளவு தண்ணீரில் வேக வைக்கவும். அரிசியையும் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் நீங்கள் விரும்பும் கீரைகளை சேர்த்து வதக்குங்கள்.
தனியாக ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து, புளிக் கரைசலை தனியாகப் பிரித்து, வதக்கிய கீரையுடன் சேர்க்கவும். பின்னர், அந்தக் கலவையில் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இப்போது அதில் போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். இதை குக்கரில் செய்தால் சூப்பராக இருக்கும். ஆனால், சில சமயங்களில் கீரை குக்கரின் ஓட்டையில் அடைத்துக் கொள்ளும் என்பதால், நீங்கள் பாத்திரத்திலேயே செய்யுங்கள். இறுதியில் ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
இந்த உணவு உண்மையிலேயே நீங்கள் நினைப்பதை விட சூப்பர் சுவையில் இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.