3 வகை கேரளத்து அப்பம்

Kerala Appam 3 types
Kerala Appam 3 types
Published on

1. பாலப்பம்

பாலப்பம் என்பது மென்மையான நடுப்பகுதி மற்றும் தட்டையான உருண்ட சுழற்சி உள்ள ஓர் அருமையான கேரளா உணவு வகை.

தேவையானவை:

இட்லி அரிசி – 2 கப்

உளுத்தம்பருப்பு – 2 மேசைக் கரண்டி

தேங்காய் – 1 பால் எடுத்துக் கொள்ளவும்

சக்கரை – 2 மேசைக்கரண்டி

ஈஸ்ட் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சுடுநீர் – தேவைக்கு

செய்முறை:

இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பருப்பு மற்றும் தேங்காயின் முதல் பாலை மிக்சியில் விழுதாக அரைக்கவும். பின்னர் சிறிது சுடுநீரில் ஈஸ்ட் மற்றும் சக்கரை சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும். அதனை மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும் புளித்த மாவில் உப்பு மற்றும் இரண்டாம் தேங்காய் பாலைச் சேர்க்கவும். அப்பக்கடாயில் சிறிது எண்ணெய் தடவி சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி, கடாயை சுற்றி சுற்றி வட்டமாக பரப்பவும். நடுவில் மெதுவாக புழுங்கி, பக்கங்கள் மென்மையாகும் வரை மூடி விட்டு சுடவும். தேங்காய் பால், முட்டை அல்லது மட்டன் கறி உடன் பரிமாறலாம்.

2. இனிப்பு வெல்லப்பம்

தேவையானவை:

பச்சரிசி – 1 கப்

தேங்காய் – ½ கப் (துருவியது)

வெல்லம் – ¾ கப்

ஏலக்காய் – 2 (பொடித்தது)

சோடா – ஒரு சிட்டிகை

உப்பு – ஒரு சிட்டிகை

சுடுநீர் – தேவைக்கேற்ப

எண்ணெய் – (பொரிக்க)

செய்முறை:

பச்சரிசியை 2–3 மணி நேரம் ஊறவைத்து, துருவிய தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் ஊற்றி, உருகியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அரிசி - தேங்காய் மாவில் வெல்லச் சாறு, ஏலக்காய் பொடி, சோடா, உப்பைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசை மாவு பதத்திற்கு சற்று அடர்த்தியாக இருக்க வேண்டும். 1 மணி நேரம் வரை மூடிப் போட்டால் சுவை கூடும். ஆனால், உடனடியாகச் செய்யவும் முடியும். அப்ப சட்டி அல்லது சிறு குழிகளுடன் உள்ள வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும். வெல்லப்பத்தை வெறும் நேரத்தில் சிற்றுண்டியாக, அல்லது காலை/மாலை தேநீருடன் பரிமாறலாம். வாழைப்பழம் சேர்த்தால் சுவை மற்றும் மென்மை கூடும். காய்ந்த தேங்காய் துண்டுகள், வெந்தயம் கொஞ்சம் சேர்த்தால் அதிகமான சுவை தரும்.

3. கள்ளப்பம்

தேவையானவை:

இட்லி அரிசி – 2 கப்

பச்சரிசி – ½ கப்

தேங்காய் – 1 கப் (துருவியது)

சக்கரை – 2 மேசைக்கரண்டி

புளித்த பதநீர் _ ½ கப்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – ½ டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்

செய்முறை:

இட்லி அரிசியை 4–5 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, தேங்காய், சோம்பு மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மையமாக அரைக்கவும். புளித்த பதநீரை அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

மாவை 6–8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும். புளித்த மாவில் உப்பைச் சேர்த்து நன்றாக கிளறவும். தவா அல்லது குக்கர் அடிப்பகுதி போன்ற கனமான பானையில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி, மூடி, மிதமான தீயில் ஒரு பக்கம் மட்டும் சுட்டுக்கொள்ளவும். மேல் பகுதி ஆவியால் வேகும். தேங்காய் பால், முட்டை கறி அல்லது சாதாரண தேநீர் உடன் பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் போனில் அழிந்த புகைப்படங்களை மீட்பதற்கான எளிய வழிகாட்டி!
Kerala Appam 3 types

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com