Kerala Pachadi: பீட்ரூட் வச்சு இப்படி ஒரு ரெசிபி நீங்க செஞ்சிருக்க மாட்டீங்க! 

Kerala Beetroot Pachadi.
Kerala Beetroot Pachadi.

God's own country என அழைக்கப்படும் கேரளா, அதன் வளமான பாரம்பரியம் மற்றும் தனித்துவமான உணவு வகைகளுக்குப் பெயர் போனது. இந்த மாநிலத்தின் பிரபலமான பல சுவை மிகுந்த உணவுகளில், பீட்ரூட் பச்சடிக்கு தனி இடம் உண்டு. பச்சடி என்பது தயிர் சேர்த்து செய்யப்படும் ஒரு சைட் டிஷ் ஆகும். இதில் இனிப்பு, புளிப்பு, காரம் என எல்லாம் கலந்து இருக்கும். இந்தப் பதிவில் கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பச்சடி எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 2 பீட்ரூட்.

  • 1 கப் தயிர்.

  • ½ கப் துருவிய தேங்காய்.

  • 1 பச்சை மிளகாய்.

  • ½ ஸ்பூன் கடுகு.

  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்.

  • சிறிதளவு கறிவேப்பிலை.

  • சிறிதளவு தேங்காய் எண்ணெய்.

  • சுவைக்கு ஏற்ப உப்பு.

செய்முறை:

முதலில் பீட்ரூட்டை தோலைச் சீவி துருவிக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக வைக்கவும். பீட்ரூட் வெந்ததும் அதை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து அப்படியே ஆறவிடுங்கள். 

பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். இந்த கலவையை அப்படியே எடுத்து பீட்ரூட்டில் சேர்த்து கலக்கவும். 

இதையும் படியுங்கள்:
சரும பராமரிப்புக்கும், முக அழகிற்கு தேங்காய் எண்ணெய்!
Kerala Beetroot Pachadi.

அடுத்ததாக பீட்ரூட் தேங்காய் கலவையில் தயிரை ஊற்றி கலந்து விடவும். இது பச்சடிக்கு ஒரு கிரீமி அமைப்பைக் கொடுக்கும். தயிர் கலந்ததும், ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் கருவேப்பிலை, கடுகு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தயாரித்து வைத்துள்ள பீட்ரூட் பச்சடியில் ஊற்றி தாலித்தால், சுவையான கேரளா பீட்ரூட் பச்சடி தயார். இறுதியில் உப்பு சரியாக இருக்கிறதா என சரி பார்த்து அனைவருக்கும் பரிமாறலாம். 

நிச்சயம் இந்த ரெசிபியை ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com