கேரளா ஸ்பெஷல் பலாக்காய் பொரியல்!

பலாக்காய் பொரியல்
பலாக்காய் பொரியல்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கேரளா ஸ்பெஷல் பலாக்காய் பொரியல் தேவையான பொருட்கள் :

1 கப் -பலாக்காய் (சிறிதாக நறுக்கியது)

1 - வெங்காயம்

2 - பச்சைமிளகாய்

1 டேபிள் ஸ்பூன் - தேங்காய் துருவல்

1/4 டீஸ்பூன் - கடுகு

1/4 டீஸ்பூன் - உ.பருப்பு

சிறிதளவு - கருவேப்பிலை

தேவையான அளவு - உப்பு

தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை

1.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உ.பருப்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

2.பின்னர் பலாக்காய் சேர்த்து மிதமான தீயில் உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

3.சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து சிறுதீயில் வைக்கவும்.

4.பலாக்காய் வெந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com