
இன்றைக்கு சுவையான கேரளா ஸ்டைல் நெய் சோறு மற்றும் அப்பளப்பூ குழம்பு ரெசிபிஸை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்:
சீரகசம்பா-1/2 கிலோ.
எண்ணெய்-50 ml.
நெய்-2 தேக்கரண்டி.
ஏலக்காய்-5
பட்டை-4
கிராம்பு-5
வெங்காயம்-2
தண்ணீர்- 1 ½ கப்.
உப்பு-1 தேக்கரண்டி.
எழுமிச்சை சாறு-1/2 மூடி.
திராட்சை-15
நெய் சோறு செய்முறை விளக்கம்:
முதலில் ½ கிலோ சீரகசம்பா அரிசியை ஊறை வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் 50 ml எண்ணெய் விட்டு 2 தேக்கரண்டி நெய்விட்டு சூடானதும் 5 ஏலக்காய், 5 கிராம்பு, பட்டை 4 சேர்த்து பொரியவிட்டு அத்துடன் நறுக்கிய 2 வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
ஊற வைத்திருக்கும் அரிசியை எண்ணெய்யில் சேர்த்து 10 நிமிடம் அடிப்பிடிக்காமல் வறுத்துக்கொள்ளவும். 1 ½ கப் தண்ணீர் ஊற்றி 1 தேக்கரண்டி உப்பை சேர்த்து மூடி வைத்து நன்றாக வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும் எழுமிச்சை ½ மூடியை பிழிந்துவிட்டு கிளறி 20 நிமிடம் ஆவியில் மிதமான சூட்டிலே வேகவிடவும். பிறகு நெய்யிலே வறுத்து வைத்திருக்கும் திராட்சை, வெங்காயம், 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான நெய் சோறு தயார்.
நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
அப்பளப்பூ குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம்-10
பூண்டு-5
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
தக்காளி-1
மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி.
அப்பளப்பூ-10.
புளி-எழுமிச்சைப்பழ அளவு.
அப்பளப்பூ குழம்பு செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 10, பூண்டு 5, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
கடைசியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்தபிறகு குழம்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்துவிட்டு எழுமிச்சை அளவு புளியை கரைத்து அதையும் இதில் சேர்த்து கலந்துவிட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக பொரித்து வைத்திருக்கும் அப்பளப்பூ 10 உடைத்து சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான அப்பளப்பூ குழம்பு தயார்.