
இன்றைக்கு சுவையான கேரளா ஸ்டைல் வாழைக்காய் அவியல் மற்றும் ஜாம் பச்சடி ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
வாழைக்காய் அவியல் செய்ய தேவையான பொருட்கள்.
வாழைக்காய்-2
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
மிக்ஸியில் அரைக்க:
தேங்காய்-1/4 கப்.
மஞ்சள் தூள்-சிறிதளவு.
வெந்தயம்-சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
பூண்டு-2
சின்ன வெங்காயம்-5
கருவேப்பிலை- சிறிதளவு.
புளிக்கரைச்சல்-2 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
வாழைக்காய் அவியல் செய்முறை விளக்கம்:
முதலில் 2 வாழைக்காயை எடுத்துக் கொண்டு அதை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது இதை ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ½ தேக்கரண்டி மிளகாய் தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் பேனில் வேக வைக்கவும்.
மிக்ஸியில் ¼ கப் தேங்காய், மஞ்சள் தூள் சிறிதளவு, வெந்தயம் சிறிதளவு, பச்சை மிளகாய் 2, சின்ன வேங்காயம் 5, பூண்டு 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாழைக்காய் வெந்ததும் அதில் அரைத்தவற்றை சேர்த்து அத்துடன் புளிக்கரைச்சல் 2 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக, நன்றாக சுண்டி வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் வாழைக்காய் அவியல் தயார்.
ஜாம் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.
நெய்-3 தேக்கரண்டி.
தக்காளி-2
பேரிச்சம்பழம்-4
உப்பு-சிறிதளாவு.
சர்க்கரை-1/2 கப்.
முந்திரி-5
திராட்சை-5
ஜாம் பச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 3 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி 5, திராட்சை 5 சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் சிறிதாக நறுக்கிய தக்காளி 2 சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் 4 சேர்த்து வதக்கவும். இதில் சர்க்கரை ½ கப் சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக நெய் பிரிந்துவரும் சமயம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவுதான். சுவையான ஜாம் பச்சடி தயார். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.