கேரளாவின் சுவை மிகுந்த இரண்டு தீயல் வகைகள்!

 உள்ளி தீயல் ...
உள்ளி தீயல் ...Image credit - masalakorb.com

கேரளா ஸ்பெஷல் உள்ளி தீயல்

தேவையான பொருட்கள்:

தேங்காய் _1,     முழுமல்லி_2 ஸ்பூன்          வெந்தயம் 1/2 ஸ்பூன்         மிளகாய் வற்றல்_8            நல்லெண்ணெய் _2 ஸ்பூன்     மஞ்சள் தூள் 3/4 +1/2 ஸ்பூன்    சிறிய உள்ளி    1/2 கிலோ    பச்சை மிளகாய் _3          உப்பு    _தேவைக்கு   புளி   _ நெல்லிக்காய் அளவு     கடுகு  _1/2 ஸ்பூன்      வத்தல் _2

செய்முறை :

முதலில் தேங்காயை சிறுக திருவி வாணலியில் இட்டு சிறு தீயில் வறுத்து சிவந்து வரும் நேரத்தில் மல்லியும், வெந்தயமும்,சேர்த்து வறுத்து அத்துடன் வற்றல் இட்டு வறுத்து 1ஸ்பூன் நல்லெண் ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து நல்ல dark brown நிறத்தில் வரும் வரை நன்கு வறுத்து கடைசியாக 3/4ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி ஆற விடவும்.

ஆறிய பிறகு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் திரித்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் சிறிய உள்ளியை இரண்டாக வெட்டி போட்டு அத்துடன் பச்சை மிளகாய் கருவேப் பிலை சேர்த்து சிறு தீயில் வறுத்து பாதி வறுபட்டு வரும் வேளையில் 1ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தேவையான உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு வதக்கி எடுக்கவும். பின்னர் புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி  பிசைந்து ஊற்றி 2 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலா பவுடரை சேர்க்கவும். 2 கப்  புளித் தண்ணீரிலேதான் தீயல் வெந்து வரும்.

வெந்து வரும் வேளையில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியில் 1/2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு வத்தல் தாளித்து கொட்டி இறக்கலாம். மிகவும் சுவையான அதிக நாள் கெட்டு போகாமல் இருக்கும் உள்ளி தீயல் தயார். இந்த ரெசிபி இட்லி, தோசை மற்றும் சாதத்துடனும் வைத்து சாப்பிட பக்காவான சுவையில் இருக்கும்.

கத்தரிக்காய் தீயல்

கத்தரிக்காய் தீயல்
கத்தரிக்காய் தீயல்Image credit - youyube.com

தேவையான பொருட்கள்:

மீடியமான அளவு கத்தரிக்காய்  _3            சிறிய வெங்காயம்__1/4 கிலோ  தக்காளி     _1 , புளி சிறிய     நெல்லிக்காய் அளவு        நல்லெண்ணெய்   _2 ஸ்பூன்   வெந்தயம்    _ 1/4 ஸ்பூன்  கடுகு         _1/4 ஸ்பூன்    மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன்  உப்பு தேவைக்கு

வறுத்து அரைக்க           தேங்காய் _ 1 கப்           நல்ல மிளகு _1/2 ஸ்பூன்      வத்தல் தூள்  _11/2 ஸ்பூன்  மல்லித்தூள்   _1 ஸ்பூன்    சீரகம்         _ 1/2 ஸ்பூன்   கறிவேப்பிலை _ சிறிது

செய்முறை:

முதலில் கத்தரிக்காயை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெந்தயத்தை போட்டு   பொரிந்ததும் கருவேப்பிலை போட்டு இரண்டாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கி மஞ்சள்தூள், உப்பு, புளி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

இதையும் படியுங்கள்:
பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?
 உள்ளி தீயல் ...

பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை போட்டு நன்கு கிளறி விடவும். மசாலா கத்தரிகாயுடன் கலந்து வெந்து எண்ணெய் பிரிந்து வற்றி வரும் தருவாயில் உப்பு சரி பார்த்து இறக்கவும். சுவையான கத்தரிக்காய் தீயல் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com