
வெஜ் குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லிமாவு - 2 கப்
இட்லி மிளகாய்பொடியில் வதக்கிய வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்பொடி, உப்புடன் சேர்த்து வதக்கிய
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை, சிவப்பு குடமிளகாய் - அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 3 நறுக்கியது சிறிது
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
இட்லிமாவுடன் வதக்கிய வெங்காயம், காய்கள், கொத்தமல்லி, வதக்கிய மிளகாய் அனைத்தையும் போட்டுக் கலக்கவும்.
குழிப்பணியாரத் தட்டில் எண்ணெய் ஊற்றி மல்டி வெஜ் பணியாரங்கள் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
குழந்தைகள் முதல் அனைவரும் மாலை நேர டிபனாக சாப்பிட ஏற்றது. சத்தானது.ருசியாக இருக்கும்.
இட்லி மாவு போண்டா
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் நறுக்கியது - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1 நறுக்கியது.
தேங்காய் துருவல் - 1/4 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க-கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
துருவிய இஞ்சி, துருவில காரட் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, காரட் , பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
இட்லி மாவில் வதக்கியதைப் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன சின்ன போண்டாக்களாக கிள்ளி போட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும். சுவையான இட்லி மாவு போண்டா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
-வசந்தா மாரிமுத்து