குழந்தைகள் விரும்பும் தக்காளி தோசை: எளிமையாகச் செய்வது எப்படி?

dosai recipes
Tomato dosa that kids love
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

க்காளி விலை மலிவாக இருக்கும் காலங்களில் தக்காளி ஊறுகாய், தக்காளி சட்னி போன்றவைகள் தாராளமாக வீடுகளில் செய்வோம். இந்த வகையில் டிபனுக்கு தக்காளி தோசை செய்து தந்தால் அனைவரும் சூப்பர் என்று உங்களை பாராட்டுவார்கள். தக்காளி தோசை எப்படி செய்வது பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி- 2 டம்ளர்
பச்சரிசி - கால் டம்ளர்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு  - ஒரு ஸ்பூன்
தக்காளி - 8 (மீடியம் சைஸ்)
வர மிளகாய் -எட்டு
பட்டை கிராம்பு லவங்கம் - தலா 2
சோம்பு -ஒரு தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் - சிறிது

தாளிக்க:
பெரிய வெங்காயம் நறுக்கியது -இரண்டு கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிது

செய்முறை: 

ட்லி அரிசி, பச்சரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து அதனுடன் வரமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதிகம் நீரூற்றாமல் அரைக்கும்போது நறுக்கிய தக்காளிகளை சேர்த்து அரைக்கவும். எடுக்கும்போது பட்டை இலவங்கம் சோம்பு சேர்த்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சமையலை எளிதாக்க: தெரிந்துகொள்ள வேண்டிய வீட்டுக்குறிப்புகள்!
dosai recipes

அரைத்து எடுத்த மாவில் தேவையான உப்பு பெருங்காயம் கலந்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் கடுகு தாளித்து அரிந்த  வெங்காயத்தை சிவக்க வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து ஆப்பமாவு பதத்தில் கலக்கவும்.

நன்றாக காய்ந்த தோசை சட்டியில் அடியில் சிறிது எண்ணெய் விட்டு ஆப்பம் ஊற்றுவதுபோல் கரைத்த தக்காளி தோசை மாவை சுற்றிலும் பரப்பி  எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவந்த பின் எடுக்கலாம்.

ஓட்டையுடன் கிரிஸ்பியாக தனிச்சுவையுடன் இருக்கும் இந்த தக்காளி தோசை. மாவு அரைத்தவுடன் இரண்டு மணி நேரத்திலேயே கூட இந்த தோசையை புளிக்காமலேயே சாப்பிடலாம் என்பதே  இதன் சிறப்பு.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் அதிகம் வைத்து பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு சேர்த்த சட்னி அருமையாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com