பாகர்வாடி:
மைதா மாவு 1 கப்
கடலை மாவு 4 ஸ்பூன்
உப்பு சிறிது
ஓமம் 1 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
வெள்ளை எள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
சர்க்கரை 1 ஸ்பூன்
மைதா மாவு, கடலை மாவு, உப்பு, ஓமம், எண்ணெய் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
வெறும் வாணலியில் தனியா, சீரகம், சோம்பு, எள் ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணவும். அத்துடன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து கலந்து வைக்கவும்.
மைதா மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொரு சப்பாத்தியிலும் சிறிது எண்ணெய் தடவி அதன்மேல் பொடித்து வைத்துள்ள மசாலாவைத் தூவி சுருட்டி கத்தியால் சின்ன சின்ன துண்டுகளாக போட்டு உள்ளங்கையில் வைத்து சிறிது தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க அருமையான சுவையில் குஜராத்தி ஸ்பெஷல் பாகர்வாடி தயார்.
ஒரு மாதம் வைத்திருந்தாலும் கெடாத இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மாலை நொறுக்கு தீனி பேஸன் பேல்:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
உப்பு தேவையானது
காரப்பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
மாங்காய்த் துருவல் 1/4 கப்
சாட் மசாலா 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, காரப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு சுத்தம் செய்த காலி பால் கவரில் விட்டு முனையில் சின்னதாக கட் பண்ணி அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் அதிகம் இடைவெளி விடாமல் நெருக்கி முறுக்கு போல் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
இப்பொழுது அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய்த் துருவல், சாட் மசாலா, கரம் மசாலா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி மேலாகமேலாக சீஸை துருவிப் போட்டு பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.