குழந்தைகள் விரும்பும் சோயா உருண்டை ஃபிரைடு ரைஸ் & முப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி!

Kids love Soya Ball Fried Rice
Published on

சோயா உருண்டை ஃபிரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்:

வடித்த பாசுமதி சாதம் - 2கப்

சோயா உருண்டைகள் - 1/2 கப்.

நறுக்கிய வெங்காயம் - 1

பச்சைப் பட்டாணி - 2 டீஸ்பூன்.

கேரட், குட மிளகாய் துண்டுகள் - 1/4 கப்

கீறிய பச்சை மிளகாய் - 2

மிளகுத்தூள் - 1 டீஸ்கள்.

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்.

நெய் அல்லது எண்ணெய்- 1 1/2 ஸ்பூன்

பட்டை, கிராம்பு – 2

ஏலக்காய்-1, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்.

வறுத்த முந்திரி - 10

செய்முறை:

பாசுமதி அரிசியை  வேகவைத்து உதிரியாக வடிக்கவும். சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  பட்டை, கிராம்பு ஏலக்காய், இஞ்சி, பூண்டு விழுது தாளித்து, பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் சேர்தது வதக்கவும்.

வதங்கிய பின் சோயா உருண்டைகளைச் சேர்த்து கிளறவும்.மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்துக்கிளறி உப்பு சேர்த்து நன்கு கிளறி வடித்த சாதத்தைக்கொட்டி கலந்து எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து முந்திரி தூவி இறக்கவும்.

சுவையான சத்தான சோயா ஃபிரைடு ரைஸ் ரெடி. தயிர் வெங்காயம் தொட்டு சாப்பிட இன்னும் வேண்டும் என கேட்டு குழந்தைகள்  சாப்பிட்டு காலி பண்ணுவார்கள்.

முப்பருப்பு கிச்சடி

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை - 2 கப்.

துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன்.

கீறிய பச்சை மிளகாய் - 4

பச்சை பட்டாணி, நறுக்கிய பீன்ஸ், கேரட், குட மிளகாய் - சேர்த்து 1 கப்.

வெங்காயம் -1

தக்காளி - 1

இஞ்சி,பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்.

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்.

பட்டை, கிராம்பு - 1

எண்ணெய் - 2 டீஸ்பூன்.

உப்பு, மல்லித் தழை - தேவைக்கு

இதையும் படியுங்கள்:
காபி பிரியரா நீங்கள்? அப்போ இந்த ரகசியங்கள் உங்களுக்குத்தான்!
Kids love Soya Ball Fried Rice

செய்முறை:

மூன்று பருப்புகளை குறையாமல் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் கோதுமை ரவையை  லேசாக வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும்.

அதில் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி  5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை நன்றாகக் கொதித்து வந்ததும், உப்பு கோதுமைரவையை கொட்டிக் கிறைவும். இதனுடன் வெந்த பருப்புகளை சேர்த்து கிளறி பொல பொல வென வந்ததும் எலுமிச்சைசாறு கலந்து கிளறி மல்லித் தழை தூவி இறக்கவும்.

இதற்கு புதினா சட்னி, வெங்காய பச்சடி தொட்டு சாப்பிடலாம். சுவையான முப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி தயார். செய்து பாருங்கள் சாப்பிட்ட தட்டு காலியாகும். அத்தனை ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com