கொரிய பாரம்பரிய உணவான கிமிச்சியை இந்திய முறையில் செய்யலாம் வாங்க!!

 கிமிச்சி...
கிமிச்சி...www.maangchi.com/

கொரியர்களின் உணவு கிமிச்சி இன்றி முழுமையடையாது என்று சொல்லலாம். கிமிச்சி கொரியாவின் பாரம்பரிய உணவாகும். இது உணவுடன் சேர்த்து உண்ணக்கூடிய சைட் டிஷ் போன்றதாகும். இந்தியாவில் எப்படி ஊறுகாய் இருக்கிறதோ அப்படி கொரியாவில் கிமிச்சியை சொல்லலாம். காய்கறிகளை புளிக்க வைத்து தயாரிக்கப்படுவது. முட்டைகோஸ், முள்ளங்கியை கிமிச்சி செய்வதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள். கொரியர்கள் இதை எல்லா உணவுடனும் சேர்த்து  உண்ணுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எண்ணெய் இன்றி செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இதில் ப்ரோபையாடிக்ஸ் இருப்பதால் சருமத்திற்கும் நல்லது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் உகந்த உணவாகும்.

கிமிச்சியை எப்படி இந்திய முறையில் செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிறிதாக நறுக்கிய முட்டை கோஸ்-1

சிறிதாக நறுக்கிய கேரட்-2

சிறிதாக நறுக்கிய முள்ளங்கி-2

ஸ்பிரிங் ஆனியன்- கையளவு.

நறுக்கிய வெங்காயம்-1

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்- 1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி.

மிளகு தூள்-1/2 தேக்கரண்டி.

அரிசி மாவு- 2 தேக்கரண்டி.

சக்கரை- 1 தேக்கரண்டி.

உப்பு- 1 தேக்கரண்டி.

வெள்ளை எள்- தேவையான அளவு.

கிமிச்சி செய்முறை விளக்கம்:

முதலில் முட்டைகோஸை எடுத்து கொண்டு  நீளமாக வெட்டிக் கொள்ளவும். இப்போது முட்டை கோஸை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு அதில் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசைந்து வைத்து, சிறிது தண்ணீர் விட்டு இன்னும் உப்பு சேர்த்து நன்றாக 3 அல்லது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் தண்ணீர் ஊற்றி அதில் 2 தேக்கரண்டி அரிசி மாவை சேர்த்து கெட்டியாகாமல் கிண்டவும். அதில் 1 ½ தேக்கரண்டி ஜீனி, 1 தேக்கரண்டி உப்பை சேர்க்கவும். நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்.

இப்போது முள்ளங்கியையும் கேரட்டையும் நீளமாக வெட்டிக்கொள்ளவும். ஸ்பிரிங் ஆனியனை சின்னதாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய காய்கறி அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவவும்.சிலர் மட்டும் எப்படி தனிமையை ரசிக்கிறார்கள் தெரியுமா? 

இதையும் படியுங்கள்:
சிலர் மட்டும் எப்படி தனிமையை ரசிக்கிறார்கள் தெரியுமா? 
 கிமிச்சி...

ஊறவைத்த முட்டைகோஸை எடுத்து நன்றாக 4 முறை அலசிக் கொள்ளவும். அதை நன்றாக உலர்த்தி விட்டு பின்பு வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்டை நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பெரிய பவுலில் வெங்காயம், இஞ்சி பூண்டு அரைத்ததை சேர்த்து அதில் ½ தேக்கரண்டி மிளகு தூள், மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, ஆற வைத்த அரிசி கஞ்சி மற்றும் கேரட், முள்ளங்கி காய்கறிகளை சேர்த்து அதில் கடைசியாக முட்டைகோஸையும் சேர்த்து கையை வைத்து நன்றாக பிசையவும். காய்கறிகள் மீது செய்து வைத்த கலவை நன்றாக ஒட்ட வேண்டும்.

பின்பு இதை ஒரு ஏர் டைட் கன்டெயினரில் இரண்டு நாட்கள் மூடி வைத்து ஊறவிடவும். இரண்டு நாள் கழித்து திறந்து பார்த்தால் நன்றாக ஊறிய கிமிச்சி தயாராகியிருக்கும். அதன் மீது வெள்ளை எள்ளை தூவி பரிமாறலாம். இதை சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். இன்டியன் ஸ்டைலில் சுவையான கிமிச்சி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com