சிலர் மட்டும் எப்படி தனிமையை ரசிக்கிறார்கள் தெரியுமா? 

Enjoying Loneliness.
Enjoying Loneliness.
Published on

உலகில் பெரும்பாலான நபர்கள் தனிமையை வெறுமை ஏற்படுத்தும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தனிமையை ரசித்து வாழ்வதையும் நாம் பார்க்கிறோம். அவர்களால் மட்டும் எப்படி தனிமையை ரசித்து வாழ முடிகிறது தெரியுமா? 

நானும் ஒரு அதிபயங்கர தனிமை விரும்பி. தனிமையை என்னால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் அது என்னுடைய இரண்டாம் உலகம். சராசரி உலகத்தைை காட்டிலும், என்னுடைய தனிமை உலகத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

  • அங்கு என்னை பழி சொல்ல யாரும் இல்லை, கேலி கிண்டல்களுக்கு இடமில்லை, இது உன்னால் முடியாது என எதிர்மறைகளை விதைக்க ஒருவரும் இல்லை.

  • அங்கு நான் நினைத்ததை நினைத்தவாறு செய்ய முடியும், பாடலாம், ஆடலாம், சிரிக்கலாம், அழலாம் என்னுடைய உணர்வுகளை அங்கு உண்மையாக வெளிக்காட்ட முடியும், எதையும் பிறருக்காக மறைக்க வேண்டிய அவசியமில்லை.

  • எனக்கானவற்றை செய்துகொள்ள அங்கு எந்த குறுக்கீடும் இருப்பதில்லை. நான் என்னிடம் நேரத்தை செலவிட தனிமையே எனக்கு உறுதுணையாக உள்ளது. 

  • உண்மையிலேயே தனிமை எனக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். என்னுடைய திறமைகளை அலசி ஆராய சிறந்த இடம் இவ்வுலகில் வேறெங்கும் காணோம்.

  • தனிமையில் என்னுடைய எண்ணங்கள் எதுவாகிலும் மாறுபட்ட கோணத்தில் யோசிக்கும். எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை வகை பிரிக்க தனிமை மிகவும் உறுதுணையாக உள்ளது.

இப்படி பல நன்மைகள் தனிமையில் உள்ளது. அதேசமயம் எப்படி தனிமையினால் நன்மைகள் இருக்கிறது எனக் கூறுகிறேனோ அவற்றால் தீமைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

  • தனிமையால் உங்களுடைய எண்ணங்களே உங்களுக்கு எதிரியாக மாறலாம்.

  • பலதரப்பட்ட எண்ண ஓட்டங்கள் காரணமாக மன உளைச்சல் ஏற்படும்.

  • தனிமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்ந்துவிட்டால், கூட்டங்களை வெறுக்க ஆரம்பிப்பீர்.

  • எங்கு சென்றாலும் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உங்களுடைய மனம் ஏங்கும்.

  • மனிதர்களுடனான தொடர்பை கணிசமாக குறைத்துக் கொள்வீர். உறவுகளில் நம்பிக்கை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
தயிர் சாதத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது இத்தனை நாள் தெரியாம போச்சே! 
Enjoying Loneliness.

தனிமையின் மகத்துவத்தை உணர்ந்து அதை முன்னேற்றப் பாதைக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள், உண்மையிலேயே சிறந்த இடத்தை அடைகிறார்கள். தனிமையில் எந்த தொந்தரவும் இல்லாமல் இருப்பதினாலேயே, சிலர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com