Kirni Juice: கோடை வெயிலுக்கு ஏத்த சூப்பர் ஜூஸ்!

Kirni Juice
Kirni Juice
Published on

பங்குனி மாதம் தொடங்கிவிட்டது. இனி சுட்டெரிக்கும் சூரியன் தன் கதகளி ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிடும். கோடை காலத்தில் அனைவரும் தங்களின் சூட்டைத் தணிக்க பல்வேறு விதமான பழ ஜூஸ் வகைகளைத் தேடிக் குடிப்பது நல்லது. அதிலும் குறிப்பாக கிர்னி பழத்தின் ஜூஸ் குடிப்பது மூலமாக, உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கிய சத்துக்களும் ஒன்று சேரக் கிடைக்கிறது. 

கிர்ணி பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் சி, இ, ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இது கோடைகாலத்தில் கிடைக்கும் பழம் என்பதால் உடல் சூட்டைத் தணிப்பது மட்டுமின்றி நீரிழிவு நோய், உடற்பருமன் போன்றவற்றிற்கும் சிறந்த பழமாக இருக்கும். எனவே இந்த பதிவில் கிர்ணி பழம் பயன்படுத்தி எப்படி ஜூஸ் செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

கிர்னி பழம் 1

ஐஸ்கட்டிகள் 

சக்கரை தேவையான அளவு

செய்முறை: 

முதலில் நன்கு பழுத்த கிர்ணி பழத்தை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடுங்கள். பின்னர் அதன் உள்ளே இருக்கும் சதைப்பற்றை மட்டும் எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்! 
Kirni Juice

பின்னர் அதிலேயே உங்களுக்கு தேவையான அளவு ஐஸ் கட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். கிர்னி பழம் கட்டிகள் இன்றி மைய அரைத்ததும் அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஓட விட்டால், அனைத்தும் ஒன்றாகக் கலந்து சூப்பர் ஜூஸ் ரெடியாகிவிடும். 

இதை அப்படியே எடுத்து ஒரு கிளாஸில் ஊற்றி குடித்தால், உடலில் உள்ள சூடு எல்லாம் மாயமாகிவிடும். மீதமுள்ள ஜூசை ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது குடித்தால், கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com