மதிய லன்ச் பாக்ஸ் முதல் காபி டிகாஷன் வரை... சமையலில் அசத்த சூப்பர் குறிப்புகள்!

smart-cooking
smart-cooking
Updated on

ன்ச் க்கு சாம்பார் சாதம் பேக் பண்ணும்போது சாதம் சூடாக இருக்கும்போதே 2ஸ்பூன் ந எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு பிறகு சாம்பாரை ஊற்றி கலந்து கொடுக்க, இருகாமல் தளரவே இருக்கும்.

பகாளாபாத் தயாரிக்கும்போது சாதத்துடன் வெண்ணைய் போட்டு ஜவ்வரிசி கஞ்சி கொஞ்சம் சேர்த்து பால்,தயிர் விட்டு சிறிது சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலந்து தயாரிக்க சுவையாக இருக்கும்.

கீரை மசியல் செய்யும்போது சிறிது சர்க்கரை, சாதம் வடித்த கஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கடைந்து தயாரிக்க பச்சை நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்.

கதம்ப சாதம், கத்தரிக்காய் சாதம் செய்யும் போது வாணலியில் தனியா-2 டீஸ்பூன், வேர்க்கடலை -1டீஸ்பூன்,கசகசா-1/2டீஸ்பூன், எள்-1டீஸ்பூன் சேர்த்து வறுத்து பொடித்துக்கொண்டு அதை சேர்த்துக் கொள்ள சுவை அதிகரித்து நன்றாக இருக்கும்.

ரசத்திற்கு மிளகு, சீரகம், பூண்டைதட்டி ரசத் தண்ணீரில் போட்டு தயாரிப்பதை‌போல ரசத்திற்கான வழக்கமான தாளிப்புடன் பொரிந்ததும், மிளகு, சீரகம் பொடித்து, பூண்டு, ப மிளகாய் தட்டியதை சேர்த்து வதக்கி பின் புளித்தண்ணீரை ஊற்றி கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்க சுவை சூப்பராக இருக்கும்.

சாம்பார் கொதித்ததும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து மூடி வைத்துவிட சுவை நன்றாக இருக்கும்.

அப்பளம் பொரிக்காமல், நெருப்பில் சுடும்போது அப்பளத்தின் மேல் நெய் பிரஷ் பண்ணி விட்டு அதன் மேல் பெப்பர் பொடியோ,சென்னா மசாலா பொடியையோ தூவி பின் சுட சுவை நன்றாக இருக்கும்.

பிரெட் டோஸ்ட் செய்யும்போது கீரை வகைகளை வேகவிட்டு மசித்து அதை சீஸுடனோ, பனீர் துருவலுடனோ தூவி டோஸ்ட் செய்ய சுவையோடு சத்தும் சேரும்.

பிங்க் சால்ட், ப்ளாக் சால்ட் என எது இருந்தாலும் நம் சமையலுக்கு கல் உப்பையே பயன்படுத்த சுவை நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் சுவையில் தட்டைப் பயறு காரக்குழம்பு செய்வது எப்படி?
smart-cooking

இட்லி பானையில் இட்லி வேகவைக்க தண்ணீரில் எலுமிச்சம் பழ தோலையோ, கொத்தமல்லி தழை சிறிதளவு போட்டோ வேகவிட பானை உள்ளே உப்பு படியாததுடன் இட்லியும் வாசமாக இருக்கும்.

காஃபி டிகாஷன் மீந்ததை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து வைத்து பின் உபயோகிக்க சுவை மாறாமல் இருக்கும்.

தோசை சுடும்போது எண்ணெய் அல்லது நெய் விடுவதைவிட ஆயில்ஸ்பிரேயர் மூலம் ஸ்பிரே பண்ண குறைந்த அளவு எண்ணையில் தோசை வாசமாக இருக்கும்.

முலாம்பழம், தர்பூசணி பழங்களில் ஜுஸ். தயாரிக்கும்போது சர்க்கரை போடாமல் அப்படியே குடிக்க அதன் இயற்கையான சுவையில் நன்றாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com