பிரியாணி தெரியும் முசு பிரியாணி தெரியுமா?

பலா மூசு பிரியாணி
பலா மூசு பிரியாணிwww.tripadvisor.in
Published on

முக்கனிகளில் அடங்கிய மா, பலா, வாழை ஆகியவற்றின் இளம் பிஞ்சுகளுக்கு மட்டும் தமிழ் மொழியில் சிறப்பான தனிப்பெயர்கள் உண்டு! மாவின் பிஞ்சை - மாவடு என்றும், வாழையின் பிஞ்சை - கச்சல் என்றும்
பலாவின் பிஞ்சை  - மூசு என்று அழைப்பார்கள்.

எந்த விதமான செய்முறைக்கும் தகுந்த தனித்துவமான சுவையுள்ள 'பலா மூசு' - பயன்படுத்தி  - அசைவத்திற்கு மாற்றான பல்வேறு உணவுகளையும் செய்ய முடியும்.

வாருங்கள், பலா மூசு பிரியாணி செய்வோம்!

தேவையான பொருட்கள்:
பலா மூசு – 1/4 கிலோ
மஞ்சள் தூள், உப்பு, தயிர், மிளகாய்த்தூள் – தலா1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு.

வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பாசுமதி அரிசி – 1 ஆழாக்கு
தண்ணீர் – 2 ஆழாக்கு.

தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை – தலா 3

செய்முறை:

முதலில் பலாமூசின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப் பகுதியை (ஒரு அங்குல அளவில்) சிறிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், தயிர் மற்றும் மிளகாய்ப்பொடி சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் எண்ணெய்யில் பொரித்தெடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாளிப்பிற்கு தேவையான பொருள்களைச் சேர்த்து பொரிந்த பின், ஊறவைத்த அரிசியை அதனோடு சேர்க்கவும். அரிசியை வறுக்கும்போது அதன் நிறம் மாறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சுமார் 5 நிமிடங்கள் வறுத்த பிறகு, இரு மடங்கு தண்ணீர் சேர்த்து அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான சருமம், தலைமுடி, நகங்களைப்பெற ஆறு வகை உணவுகள்!
பலா மூசு பிரியாணி

வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து முதலில் பொரித்து வைத்த பலாமூசு துண்டுகளை சேர்த்துக்கொள்ளவும். 2 நிமிடங்கள் நன்றாக வதங்கியதும் , உதிரியாக வேகவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறினால் சுவையான பலா மூசு பிரியாணி தயார்.

ஒருமுறை செய்து சுவைத்தால், மீண்டும் மீண்டும் உங்களைச் செய்யத் தூண்டும் இந்த மூசு பிரியாணி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com