கொள்ளு உடலுக்கு வலிமை தரும் தானிய வகையாகும். இதன் காரணமாகவே நமது உணவில் அதை சேர்க்கச் சொல்லி நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். ஆனால் பலருக்கு இதன் சுவை பிடிப்பதில்லை. காரணம் என்னவென்றால் அவர்களுக்கு இதை சரியாக சமைக்கத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கொள்ளு பருப்பை நாம் பல வகைகளில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த பதிவில் கொள்ளு குழம்பு எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 2 கப்
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - ½ ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ½ கப் சின்ன வெங்காயம், 1 கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் சோம்பு மற்றும் சீரகம், சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஒரு துண்டு இஞ்சி, 2 தக்காளி சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொள்ளை முதல்நாள் இரவே கழுவி முழுவதும் ஊறவைத்து முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை குக்கரில் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் வானிலையை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன் பின் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும், மசாலாத்தூள் அனைத்தையும் சேர்த்து, அதனுடன் உப்பும் கலந்து வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் கொள்ளை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். இறுதியில் குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், சுவையான ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு குழம்பு ரெடி.