கொண்டைக்கடலை வைத்து செய்யும் மாலை நேர கட்லெட்! 

Kondaikadalai Cutlet.
Kondaikadalai Cutlet.
Published on

இந்த குளிர்காலத்தில் மாலை நேரத்தில் சுவையாக ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் போல இருக்கிறதா? அப்படியானால் கொண்டைக்கடலை பயன்படுத்தி செய்யப்படும் இந்த கட்லட் ரெசிபி ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் சுலபம். மேலும் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

கொண்டைக்கடலையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, மக்னீசியம் என அனைத்துமே உள்ளது. இது நம் உடலில் ஆற்றலை அதிகரிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எவ்வித நோயும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளும். கடலையை அப்படியே வேக வைத்து கொடுத்தால் அவ்வளவாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதை கட்லெட்டாக செய்து கொடுத்தால் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். 

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை - 200 கிராம் 

அரிசி மாவு - 2 ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - ½ ஸ்பூன் 

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

சீரகத்தூள் - ½ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் கொண்டைக் கடலையை இரவில் ஊற வைத்து, அதை குக்கரில் போட்டு நான்கு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கருவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், ஆகிவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விராட் கோலியின் உடலை பிட்டாக வைத்திருக்க உதவும் கருப்புத் தண்ணீர்!
Kondaikadalai Cutlet.

அடுத்ததாக கொண்டக்கடலையை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, கொண்டைக்கடலை மாவு, சீரகத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, எலுமிச்சை சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். 

ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து, பிசைந்து வைத்துள்ள மாவை கட்லெட் போல தட்டி இரு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை கட்லெட் ரெடி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com