விராட் கோலியின் உடலை பிட்டாக வைத்திருக்க உதவும் கருப்புத் தண்ணீர்!

Benefits of drinking black water!
Benefits of drinking black water!

‘கருப்பு நீர்’ எனப்படும் அல்கலைன் நீரை நிறைய பேர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள் அல்லது விராட் கோலி இதைத்தான் குடிக்கிறார் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நீரை விளையாட்டு வீரர்களும் நடிகர்களும் ஏன் குடிக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியுமா?

இந்த நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன. விராட் கோலி உடல் பிட்டாக இருப்பதற்கு இந்த நீர்தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நீரின் விலைதான் கொஞ்சம் அதிகம். ஆன்லைனில் ஒரு லிட்டர் அல்கலைன் நீரின் விலை ரூபாய் 4000க்கு விற்கப்படுகிறது. இந்த நீரில் சராசரி நீரில் இருக்கும் pH அளவை விட அதிகமாக இருப்பதால், இதைக் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

அல்கலைன் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 

இரத்த சர்க்கரையைக் குறைக்கும்: அல்கலைன் நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்கின்றனர். மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுப்பெறும்.

இரத்த அழுத்தம் குறையும்: இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் அல்கலைன் நீர் குடிப்பது நல்லது. அதில் நிறைந்துள்ள கனிமச் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதனால் இரத்த அழுத்த பாதிப்புகள் குறையும்.

இதையும் படியுங்கள்:
உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் பானங்கள்!
Benefits of drinking black water!

எடை இழக்க உதவும்: அல்கலைன் நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுவதால், உடல் எடை இழப்புக்கு இது பெரிதும் உதவும். இது நமது உடல் எடையை கட்டுப்படுத்தி பிட்டாக வைத்திருக்க உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் அல்கலைன் நீரைக் குடிப்பதால் நன்மை பெறலாம்.

நீரேற்றத்துடன் வைத்திருக்கும்: பொதுவாகவே, தண்ணீர் நமது உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தாலும், கருப்பு நீர் நம் உடலை இரு மடங்கு அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கும். எனவே, உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்திருக்க விரும்புபவர்கள் சாதாரண நீர் குடிப்பதை விட, கருப்பு நீர் குடிப்பது நல்லது.

புற்று நோயாளிகளுக்கு நல்லது: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு நீரைக் குடிப்பது நல்லது. உடலில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால் அதில் புற்றுநோய் செல்கள் நன்கு வளரும். எனவே, அல்கலைன் நீரை குடிக்கும்போது உடலின் அமிலத்தன்மை நடுநிலையாகிறது. இதனால் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கருப்பு நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com