கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்!

கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்!
சௌமியா சுப்ரமணியன்

என் பெயர் சௌமியா சுப்பிரமணியன். பள்ளி கல்லூரி படித்து முடித்து திருமணமாகி, என் கணவர் , மற்றும் இரண்டு மகன்கள், தாயார், என் அண்ணன், என் மற்றும் மாமியார் என அனைவரும் ஒன்றாக சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டில் விதவிதமாக சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாறுவது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இது தவிர சமையல் குறிப்பு, கவிதை, சிறுகதை துணுக்கு எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது , தோட்டத்தை பராமரிப்பது எனது பொழுதுபோக்கு. வீட்டு வேலைகளை நானே செய்வதோடு, எனது தாயார் மற்றும் மாமியாரை கவணமாக பார்த்துக்கொள்கிறேன். மேலும் எங்கள் வீட்டு செல்லப்பிராணியாகிய "ஆஸ்கர்" மற்றும் "அதீனா" என்கிற இரு நாய்குட்டிகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடுவதும், என் வீட்டு மீன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்து ரசிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது.

Updated on

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 2 டம்ளர்

கடலை எண்ணெய் - தேவையான அளவு 

துவரம் பருப்பு - 1/2 டம்ளர்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பட்டை - 2 

சிறிய வெங்காயம் - 2 கைப்பிடி அளவு

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மிளகாய் வற்றல் - 4

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1சகட்டிகை

கறிவேப்பிலை - 2 கொத்து

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு 

பூண்டு - 10 பல்

தேங்காய் - 4 துண்டு

நெய் - 1 கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு  எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், பட்டை தாளித்து, சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கியதும், பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்றாக வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் பருப்பு சேர்த்து பாதி வெந்ததும், அரிசியை போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வேகவிட்டு, பூண்டு, தேங்காயை சேர்க்கவும். 

தண்ணீர் நன்றாக வற்றும் போது சாதம் முழுமையாக வெந்த பதத்தில் நெய், கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறவும்.

சுவையான கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம் ரெடி. இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

logo
Kalki Online
kalkionline.com