கும்பகோணம் மொறு மொறு ரவா தோசை - கல்யாண வீட்டு ப்ரூட் கேசரி!

Kumbakonam Moru Moru Rava Dosa - Kalyana Veettu Fruit Kesari!
dosai - kesari recipes
Published on

கும்பகோணம் மொறு மொறு ரவா தோசை

தேவையான பொருட்கள்:

சூரியகாந்தி எண்ணெய்_ 100 மில்லி

சீரகம் _2 ஸ்பூன்

மிளகு _1 ஸ்பூன்

உப்பு _தேவையான அளவு

பொட்டுக்கடலை _ 1 ஸ்பூன்

காரட் _1

கருவேப்பிலை _1 கொத்து

பெருங்காயத்தூள் _1 ஸ்பூன்

வறுத்த ரவை _ 100 கிராம்

அரிசிமாவு _200 கிராம்

மைதா மாவு _100 கிராம்

பச்சை மிளகாய் _2 (பொடியாக நறுக்கியது

செய்முறை:  

முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை போட்டு 300 மில்லி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். நன்றாக ஊறியப்பின் இத்துடன் மைதா மாவு, அரிசிமாவு, பெருங்காயத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், முழு மிளகு, சீரகம் மற்றும் சிறிது நீளமாக நைசாக வெட்டிய காரட் துண்டுகள் மேலும் தேவையான உப்பு சேர்த்து நறுக்கிய கருவேப்பிலை பொட்டுக்கடலை போட்டு இத்துடன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 700 மில்லி தண்ணீர் இன்னும் சேர்த்து நன்றாக கை கொண்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் ஒரு தோசைக்கு தேவையான மாவை ஒரு கப்பில் எடுத்து சிறிது சிறிதாக கல் முழுவதும் விரித்து ஊற்றி இரண்டு நிமிடம் வேகவிட்டு திருப்பி போட்டு வேக விடவும். நன்கு பொரிந்து வெந்ததும் எடுத்து தட்டிற்கு மாற்றி விடலாம். சுவையான, அனைவரும் விரும்பி சாப்பிடும் கும்பகோணம் ரவா தோசை தயார்.

மிருதுவான எளிதாக செய்யக்கூடிய

ப்ரூட் கேசரி

சன் ப்ளவர் ஆயில் _200 மில்லி

நெய் _100 மில்லி

கேசரி பவுடர் _1 சிட்டிகை (தேவையானால்)

வறுக்காத ரவை _250 கிராம்

சீனி _500 கிராம்

முந்திரி _100 கிராம்

உலர்ந்த திராட்சை_ 100 கிராம்

செரிப்பழம் _100 கிராம்

ஏலக்காய் பொடி _1 ஸ்பூன்

கனிக்குழை(Tutti fruity) _100 கிராம்

தண்ணீர் _750 மில்லி

இதையும் படியுங்கள்:
இந்த துவையலை எப்படி செய்வது?பார்க்கலாம் வாங்க...
Kumbakonam Moru Moru Rava Dosa - Kalyana Veettu Fruit Kesari!

செய்முறை:

முதலில் 750 மில்லி தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து தனியாக ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் தனியாக ஒரு பாத்திரம் வைத்து சிறு தீயில் இருக்கும்போது அதில் எண்ணெய் ஊற்றி, உடனடியாக ரவையைப் போட்டு, பின் திராட்சை போட்டு வறுக்க வேண்டும். திராட்சை உப்பி வரும்வரை வறுக்கவும். பின் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் அதனுடன் சேர்த்து இத்துடன் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். ரவை தண்ணீரை இழுத்து வெந்து சுருண்டு வரும் நேரத்தில் சீனியைப்போட்டு கொள்ளலாம். தீயை சிறிது கூட்டி சீனி சிறிது இளகி வரும் போது ஏலக்காய்த்தூள் போட்டு இறுகி வரும்வரை கிளறி கொடுக்கவும்.

இறுதியில் நெய்யை ஊற்றி கிளறவும்போதே கேசரி வாசனை மூக்கை துளைக்கும். கையில் தொட்டு பார்க்கும் போது ரவை கையில் ஒட்டாத நிலை வரும்போது இறக்கி வைத்துவிட்டு செரிப்பழம், முந்திரி, Tutti fruity, ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி பவுலின் எடுத்து பரிமாறலாம். மிகவும் சுவையான, ப்ரூட் கேசரி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com