இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எல்லா உணவுக்கும் ஏற்றது இந்த கும்பகோணம் கடப்பா!
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு – அரை கப்
உருளைக்கிழங்கு – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பிரியாணி இலை – அரை
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் – 4 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
பூண்டு – 4
இஞ்சி – 1 இன்ச்
கசகசா – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பட்டை – 1
கிராம்பு – 2
செய்முறை:
பாசிப்பருப்பை வாணலியில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். ஒரு குக்கரில் வறுத்த பாசிபருப்புடன் உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைத்து, வெப்பம் தணிந்ததும், இரண்டையும் மசித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள, தேங்காய், பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி, கசகசா, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், பிரியாணி இலை, பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இரண்டும் நன்கு வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலா விழுதைச் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் வேகவைத்து மசித்த பருப்பு, உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்த பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.
அடுப்பங்கரை முதல் அடுத்த வீடு வரை ஈர்க்கும் கமகம வாசத்துடன் கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா தயார்! ரசித்து... ருசியுங்கள்!