அரபுநாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பான குனாஃபா!

குனாஃபா...
குனாஃபா...www.archanaskitchen.com

குனாஃபா அரபு நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகையாகும். இது ரம்ஜானுக்கு தவறாமல் செய்ய கூடிய இனிப்பாகும். இதை எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

குனாஃபா மாவு என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும் அல்லது குனாஃபா சேமியா என்று கேட்டால் கிடைக்கும்.

குனாஃபா சேமியா-50 கிராம்.

வெண்ணை -  தேவையான அளவு.

பொடியாக்கி வைத்த பிஸ்தா பருப்பு.

மோசாரெல்லா சீஸ்- தேவையான அளவு.

கிரீம் சீஸ்- தேவையான அளவு.

குனாஃபா செய்முறை:

முதலில் குனாஃபா சேமியாவை சிறியதாக உடைத்து கொள்ளவும். உடைத்து வைத்த சேமியாவில் வெண்ணையை போட்டு பிசைந்து கொள்ளவும். வெண்ணை சேமியா முழுவதும் பரவுவது போல நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும். இப்போது பிசைந்த சேமியாவை இரண்டு பாகமாக பிரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் ஃபேனில் வெண்ணையை தடவி எடுத்து கொள்ளவும். அதில் பிரித்து வைத்திருந்த சேமியாவில் ஒரு பாகத்தை எடுத்து அடை தட்டுவது போல நன்றாக ஃபேனில் பரப்பி வைக்கவும். அதன் மீது கிரீம் சீஸை போட்டு அதையும் பரப்பி விடவும். இப்போது அதன் மீது மோசிரெல்லா சீஸ்ஸை பரப்பவும்.

மீதம் இருக்கும் சேமியாவை அந்த சீஸ்ஸின் மீது சமமாக பரப்பவும். இப்போது அதை நன்றாக வேகவிடவும்.

இதையும் படியுங்கள்:
உடல் நலனை சீராக்கும் சேப்பங்கிழங்கு!
குனாஃபா...

அதற்கு நடுவே ஒரு பாத்திரத்தில் ½ கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் 1 கப் ஜீனியை சேர்த்து கொள்ளவும். பாவு பதம் தேவையில்லை ஜீனி நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது இன்னொரு ஃபேனில் வெண்ணை தடவி எடுத்து கொள்ளவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த குனாஃபா சேமியாவை அப்படியே இந்த ஃபேனில் திருப்பி போட்டு இன்னொரு பக்கத்தையும் நன்றாக வேக விடவும்.

இப்போது இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பின் குனாஃபாவை அப்படியே தட்டில் மாற்றிக் கொள்ளவும். அதன்  மீது செய்து வைத்திருந்த சுகர் சிரப்பை ஊற்றவும். அதன் மீது பொடியாக வெட்டி வைத்திருந்த பிஸ்தாவை அழகுக்கு சேர்க்கவும். இப்போது நல்ல சுவையான இனிப்பான கிரீம் குனாஃபா ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com