

ஆவாரம் பூ துவையல்
தேவை:
ஆவாரம் பூ மடல்கள் - 100 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
மிளகாய் - 3
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 25 கிராம்
இஞ்சி - சிறிது
புளி - சிறிது
தக்காளி - 3
பெருங்காயப் பொடி - 3 சிட்டிகை
பாசிப்பருப்பு - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
மல்லி இலை : 1 கொத்து
செய்முறை:
வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி, இஞ்சி போன்றவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை தனியாக பொன் வறுவலாக வறுத்தெடுத்து சூடு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் கலந்து அரைத்து, இறுதியில் மல்லி இலைகளையும் சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள ஆவாரம் பூ மடல்களை வதக்காமல் வேகவைக்காமல் அப்படியே போட்டு மைய ஆட்டிக் கொள்ளவும். பிறகு தாளித்துக்கொள்ளவும். தேவையெனில் தேங்காய் துருவல் தூவி கலந்துகொள்ளலாம். சுவையான, சத்தான ஆவாரம் பூ துவையல் ரெடி.
ஆவாரம் பூ சூப்
தேவை:
ஈர ஆவாரம்பூ – 1 கப்
தண்ணீர் – 250 மி.லி
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
கேரட் – 1
பீன்ஸ் – 5
தக்காளி – 1
வெங்காயம் – சிறிது
கொத்தமல்லி, புதினா – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கலக்கவும். பிற காய்கறி, கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேகவைக்கவும். நல்ல மணம் வரும்போது மசித்து, அடுப்பை நிறுத்தி, சூடு ஆறும் முன் வடிகட்டி, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும். சுவையான ஆவாரம் பூ சூப் தயார்.
ஆவாரம் பூ காபி
தேவை:
ஆவாரம் பூ பொடி – 2 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கருப்பட்டி – ஒரு டீஸ்பூன்
பால் – 1/2 கப்
செய்முறை:
இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூ பொடி, பட்டை ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். பாதியாக சுண்டியதும் வடிகட்டி, பால், கருப்பட்டி சேர்த்துப் பருகலாம். அள்ளும் சுவையில் ஆவாரம் பூ காபி ரெடி.
ஆவாரம் பூ கூட்டு
தேவை:
ஆவாரம்பூ - 1 கப்
துவரம்பருப்பு - அரை கப்
சாம்பார் வெங்காயம் நறுக்கியது- கால் கப்
தக்காளி நறுக்கியது - கால் கப்
பூண்டு பற்கள் - 10
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவைக்கு
தாளிக்க - தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். பிறகு அதை நன்றாக மசித்து வைக்கவும். துவரம்பருப்புக்கு மாற்றாக பாசிப்பருப்பு பயன்படுத்தலாம்.
ஆவாரம்பூவை தண்ணீரில் அலசி அதன் இதழ்களை மட்டும் தனித்தனியாக பிரித்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கிவிடவும். பிறகு ஆவாரம்பூ இதழ்களை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் மசித்து வைத்த பருப்பை சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்கவிடவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து இலேசாக கொதித்ததும் உப்பு, தாளிப்பு சேர்த்து இறக்கவும். சூப்பர் சுவையில் ஆவாரம் பூ கூட்டு தயார்.