சத்தான ஸ்நாக்ஸ்க்காக இனி கடையைத் தேடாதீங்க!!

Nutritious snacks
Small grain laddu
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தினை மாவு அதிக சத்துக்கள் கொண்ட சிறுதானிய உணவுகளில் ஒன்று. தினை நம் இதயத்தை பலப்படுத்த உதவும். விட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்த ஒரு சிறந்த சிறு தானியம். தினையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள இது கொழுப்பின் அளவை குறைக்க வெகுவாக உதவுவதால் எந்த ஒரு டயட் முறையிலும் தினையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

தேனும் தினை மாவும் லட்டு:

தினை‌. 1 கப்

தேன் 4 ஸ்பூன் 

ஏல பொடி 1/2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு 10 

நெய் 2 ஸ்பூன்

செய்முறை;

தினையை நன்கு நீரில் நனைத்து இரண்டு மூன்று முறை களைய வேண்டும். இதில் நிறைய தூசு, அழுக்குகள் இருக்கும். எனவே நன்கு களைந்து நீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் பரத்தி நன்றாக உலர விடவும். பிறகு வாணலியில் போட்டு நன்கு சூடு வர வறுத்து எடுக்கவும்.

சிறிது ஆறியதும் மிக்ஸியில் நைஸ் பொடியாக அரைத்து எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி தேன் நான்கு ஸ்பூன், ஏலப்பொடி அரை ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பு துண்டுகள் எல்லாம் சேர்த்து உருண்டைகளாக பிடிக்க ருசியான, சத்தான, தேனும் தினை மாவும் லட்டு தயார்.

logo
Kalki Online
kalkionline.com