செய்வோம்; சாப்பிடுவோம். சத்துகளையும் தெரிந்துகொள்வோம்!

காசினி கீரை போண்டா
காசினி கீரை போண்டா

ன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிப்பது பெற்றோருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் உண்ண திண்பண்டங்களைக் கேட்கின்றனர். கடைகளில் விற்கும் திண்பண்டங்கள் எல்லாம் ரசாயனம் கலந்து இருக்கிறது. இப்படிப்பட்ட நச்சுத் தன்மையுள்ள திண்பண்டங்களைக் குழந்தை களுக்குக் கொடுக்காமல் வீட்டிலேயே எளிதாகவும், சத்து நிறைந்ததாகவும் திண்பண்டங்களைச் செய்து கொடுக்கலாம். சில எளிய திண்பண்டங்களின் செய்முறை பின்வருமாறு:

நந்தினி சுப்ரமணியம்
நந்தினி சுப்ரமணியம்

காசினி கீரை போண்டா

தேவையான பொருட்கள்: காசினி கீரை - 1 கட்டு, கடலை மாவு – ½ கிலோ, அரிசி மாவு – 50 கிராம், பச்சை/வரமிளகாய் – 5, வெங்காயம் – 2, பெருங்காயம் – 2 கிராம், உப்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை: காசினி கீரையை தண்டுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கடலை மாவு மற்றும் அரிசி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய காசினி கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து கெட்டியாக உருட்டி கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
கை, கால் நகப்பராமரிப்பு டிப்ஸ்!
காசினி கீரை போண்டா

பயன்கள்:

* வைட்டமின் A, B, C, மற்றும் தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து என சகல சத்துக்களையும் வைத்திருப்பது காசினி கீரையாகும்.

* உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது.

* மூளையைச் சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது

* நோய்களைக் குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துவதுடன், வயிற்றுப்பூச்சிகளை அழிக்கிறது.

* பல் சம்பந்தமான உண்டுவரக் குணமாகும். எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முருங்கைக்கீரை பாசிப்பருப்பு வடை

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 தம்ளர், முருங்கைக்கீரை - 4 படி, வெங்காயம் – 2, பச்சை அல்லது வரமிளகாய் – 4,  சோம்பு - ½ டீஸ்பூன், பெருங்காயம் - 2 கிராம், பூண்டு – 4, உப்பு தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, நீர் விடாமல் அரைத்து கரகரப்பு பதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றை பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அரைத்த பாசிப்பருப்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு இத்துடன் சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும். இந்த மாவை வட்டமாக நடுவில் ஓட்டை போட்டு வடைபோல் தட்டி எடுத்து கடலை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முருங்கைக்கீரை பாசிப்பருப்பு வடை
முருங்கைக்கீரை பாசிப்பருப்பு வடை

பயன்கள்:

* ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்ல பலன் தரும்.

* இலை சாறு ரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும்.

* கீரையை வாரத்திற்கு மூன்று நாட்களாவது சமைத்து சாப்பிட்டு வந்தால் புரதக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி பாதிப்பு போன்ற பிரச்னைகளை இல்லாமல் செய்துவிடும்.

* இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

* முருங்கைக் கீரை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்னைகள் எளிதில் குணமாகும்.

* நினைவுத் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு உணவில் பாசிப்பயிறை கொடுப்பதன் மூலம் ஞாபகச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது

* உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது.

* மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

* இதில் இருக்கும் தாது உப்புகள் ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

* புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் சேராமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com