சூப்பர் சுவையில் கேரட் ஓட்ஸ் இட்லி - கருவேப்பிலை பொடி ரெசிபிஸ்!

Caraway powder - Oats Carrot Idlis recipes
Healthy recipes
Published on

ன்றைக்கு சுவையான கேரட் ஓட்ஸ் இட்லி மற்றும் கருவேப்பிலை பொடி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கேரட் ஓட்ஸ் இட்லி செய்ய தேவையான பொருட்கள்.

ஓட்ஸ்-1கப்.

எண்ணெய்-சிறிதளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1.

இஞ்சி-1 துண்டு.

கேரட்-1.

ரவை-1கப்.

தயிர்-1 கப்.

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

கேரட் ஓட்ஸ் இட்லி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் ஓட்ஸ் 1 கப்பை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சிறிது விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, இஞ்சி சிறிதாக நறுகியது 1 துண்டு, துருவிய கேரட் 1, ரவை 1 கப், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இத்துடன் அரைத்து  வைத்திருக்கும் ஓட்ஸை சேர்த்து அத்துடன் தயிர் 1 கப், உப்பு தேவையான அளவு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.

இதை 20 நிமிடம் மூடி வைத்துவிட்டு பிறகு எடுத்து சிறிது கொத்தமல்லி சேர்த்து கலந்துவிட்டு இட்லி பாத்திரத்தில் இட்லி போல ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான கேரட் ஓட்ஸ் இட்லி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே டிரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கருவேப்பிலை பொடி செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கருப்பு உளுந்து-1கப்.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

கருப்பு எள்-1/4 கப்.

கருவேப்பிலை-2 கப்.

உப்பு-தேவையான அளவு.

பெருங்காயம்-1 துண்டு.

மிளகு-2 தேக்கரண்டி.

வரமிளகாய்-6

பூண்டு-10.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான உருளை பாப்கார்ன்- காலிஃபிளவர் சமோசா செய்யலாம் வாங்க!
Caraway powder - Oats Carrot Idlis recipes

கருவேப்பிலை பொடி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு பெருங்காயம் 1 துண்டு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். இப்போது இதில் 2 தேக்கரண்டி மிளகு, கருப்பு உளுந்து 1 கப், கடலைப்பருப்பு 1 கப், வரமிளகாய் 6, பூண்டு 10, கருப்பு எள் ¼ கப், நன்றாக காயவைத்து வெயிலில் உலர்த்திய கருவேப்பிலை 2 கப், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இப்போது இதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுத்தால் சுவையான கருவேப்பிலை பொடி தயார். இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த பொடியை மூன்று மாதம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப்பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com