இன்றைக்கு சுவையான மதுரை ஸ்பெஷல் கொத்து இடியாப்பம் மற்றும் சோயா வெங்காயக்கறி ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
கொத்து இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்;
வரமிளகாய்-4
பூண்டு-3
சின்ன வெங்காயம்-7
கருவேப்பிலை-சிறிதளவு.
வெண்ணெய்-1தேக்கரண்டி.
வெங்காயம்-1
தக்காளி-1
உப்பு- தேவையான அளவு.
முட்டை-1
இடியாப்பம்-1
கொத்தமல்லி-சிறிதளவு.
கொத்து இடியாப்பம் செய்முறை விளக்கம்;
முதலில் மிக்ஸியில் சுடுத்தண்ணீரில் ஊற வைத்த 4 வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 3 பூண்டு, 7 சின்ன வெங்காயம் இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது தோசைக்கல்லில் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துவிட்டு நீளமாக வெட்டிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் பேஸ்டையும் சேர்த்து கலந்துவிட்டு முட்டை1 உடைத்து ஊற்றி நன்றாக கலந்துவிடவும். இப்போது வேக வைத்திருக்கும் இடியாப்பம் 1 கப் சேர்த்து நன்றாக கொத்தி எடுத்தால் அட்டகாசமான கொத்து இடியாப்பம் தயார். கடைசியாக மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும். கொத்து இடியாப்பம் டேஸ்ட் வேற வெலவலில் இருக்கும். நீங்களும் கண்டிப்பாக இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சோயா வெங்காயக்கறி செய்ய தேவையான பொருட்கள்;
மீல் மேக்கர்-200 கிராம்.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
பட்டை-1
கிராம்பு-2
ஏலக்காய்-4
பச்சை மிளகாய்-3
கருவேப்பிலை-சிறிதளவு.
சின்ன வெங்காயம்-500 கிராம்.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-2 தேக்கரண்டி.
தனியாத்தூள்-1 தேக்கரண்டி.
ஜீரகத்தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
தண்ணீர்- 1 ½ கப்.
உப்பு- தேவையான அளவு.
சோயா வெங்காயக்கறி செய்முறை விளக்கம்;
முதலில் 200 கிராம் மீல் மேக்கரை தண்ணீரில் ஊற வைத்து பிறகு எடுத்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது குக்கரில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், பட்டை 1, கிராம்பு 2, ஏலக்காய் 4, பச்சை மிளகாய் 3, கருவேப்பிலை சிறிதளவு, 500 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
இப்போது 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், அரைத்து வைத்திருக்கும் சோயாவை சேர்த்து கிண்டிவிட்டு மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி தனியாத்தூள், 1 தேக்கரண்டி ஜீரகத்தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து 1 ½ கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுக்கவும். பிறகு அடுப்பில் 5 நிமிடம் தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிந்து வரும்வரை கிண்டிவிட்டு இறக்கவும். இந்த ரெசிபி தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.