
இன்றைக்கு சுவையான தக்காளி பொங்கல் மற்றும் முட்டை சம்மந்தி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
தக்காளி பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
சீரகசம்பா அரிசி-1 கப்
பாசிப்பருப்பு-4 தேக்கரண்டி
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-1
இஞ்சி-1 துண்டு
தக்காளி-1
கருவேப்பிலை-சிறிதளவு
நெய்-2 தேக்கரண்டி
தாளிக்க,
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
முந்திரி-5
கருவேப்பிலை-சிறிதளவு
பச்சை மிளகாய்-1
நெய்-2 தேக்கரண்டி
தக்காளி பொங்கல் செய்முறை விளக்கம்.
முதலில் 1 கப் சீரகசம்பா அரிசிக்கு 4 தேக்கரண்டி பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஃபேனில் லேசாக வறுத்துவிட்டு தண்ணீர் வீட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இதை குக்கரில் மாற்றிவிட்டு மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு, தக்காளி 1 அரைத்து பேஸ்டாக சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 3 ½ கப் அளவு தண்ணீர் சேர்த்துவிட்டு 2 தேக்கரண்டி நெய், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்.
பொங்கல் நன்றாக குழைந்து தயாராகியிருக்கும். இப்போது தாளிக்க நெய் 2 தேக்கரண்டியில் மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, முந்திரி 5, பச்சை மிளகாய் 1 சேர்த்து தாளித்து ஊற்றிவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான தக்காளி பொங்கல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்க.
முட்டை சம்மந்தி செய்ய தேவையான பொருட்கள்.
முட்டை-2
துருவிய தேங்காய்-5 தேக்கரண்டி
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
கருவேப்பிலை-சிறிதளவு
கொத்தமல்லி-சிறிதளவு
கரம் மசாலா-1 தேக்கரண்டீ
சோம்பு-1 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
முட்டை சம்மந்தி செய்முறை விளக்கம்.
முதலில் முட்டை இரண்டை தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது முட்டையை இரண்டாக வெட்டி வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் துருவிய தேங்காய் 5 தேக்கரண்டி, வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, சோம்பு 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இதை ஒரு பவுலில் மாற்றிவிட்டு எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் கருவை இத்துடன் சேர்த்து கலந்துவிட்டு முட்டையின் வேக வைத்த வெள்ளைப் பகுதியில் இதை ஸ்டப் செய்து பஜ்ஜி மாவை நன்றாக கலந்து அதில் முட்டையை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான முட்டை சம்மந்தி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.