இன்றைக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ சாம்பார் மற்றும் பச்சைப்பயிறு குருமா வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வாழைப்பூ சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்;
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-4
கருவேப்பிலை-சிறிதளவு.
வெங்காயம்-1
தக்காளி-1
வாழைப்பூ-1கப்.
கேரட்-1கப்.
முருங்கைக்காய்-1
உப்பு- தேவையான அளவு.
சாம்பார் பொடி-1 தேக்கரண்டி.
துவரம் பருப்பு-1கப்.
வாழைப்பூ சாம்பார் செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி கடுகு, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரித்துக்கொண்டு நறுக்கிய வெங்காயம்1, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இப்போது இதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ 1 கப் சேர்த்து விட்டு, சிறிதாக நறுக்கிய முருங்கைக்காய் 1, நறுக்கிய கேரட் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்துவிட்டு உப்பு தேவையான அளவு சேர்த்துவிட்டு 1 தேக்கரண்டி சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக வேக வைத்த 1 கப் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான வாழைப்பூ சாம்பார் தயார். நீங்களும் விட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு-1/2கப்.
சின்ன வெங்காயம்-3
பச்சை மிளகாய்-1
பூண்டு-3
இஞ்சி-1 துண்டு.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
சோம்பு-1/2 தேக்கரண்டி.
கசாகசா-1/2 தேக்கரண்டி.
பட்டை-1
ஏலக்காய்-2
முந்திரி-4
தயிர்-1 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-1/4 கப்.
தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1கப்.
தக்காளி-1கப்.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
பச்சைப்பயிறு குருமா செய்முறை விளக்கம்.
முதலில் ½ கப் பச்சைப்பயிறை மூன்று நிமிடத்திற்கு வறுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
இப்போது மிக்ஸியில் 3 சின்ன வெங்காயம், 3 பூண்டு, பச்சை மிளகாய் 1, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு, ½ தேக்கரண்டி சோம்பு, கசகசா ½ தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 2, முந்திரி 4, தயிர் 1 தேக்கரண்டி, ¼ கப் தேங்காய் சேர்த்து தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு 1 கப் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பின் பச்சைப்பயிறை சேர்த்து கலந்துவிடவும். இத்துடன் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் அரைத்த விழுதை சேர்த்து 4 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லி தூவி கொதிவிட்டு இறக்கவும். அவ்வளவு தான். சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சைப்பயிறு குருமா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.