Sweet Chettinad Kandhar Appam-Coconut Rava Ladoo
Sweet Chettinad Kandhar Appam-Coconut Rava LadooImage Credits: YouTube

இனிப்பான செட்டிநாடு கந்தர் அப்பம் - தேங்காய் ரவா லட்டு செய்யலாமா?

Published on

ன்றைக்கு சுவையான செட்டிநாடு கந்தர் அப்பம் மற்றும் தேங்காய் ரவா லட்டு சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

கந்தர் அப்பம் செய்ய தேவையான பொருட்கள்;

பச்சரிசி-2 கப்.

உளுத்தம் பருப்பு-1/4 கப்.

வெந்தயம்-சிறிதளவு.

துருவிய தேங்காய்-3 தேக்கரண்டி.

ஏலக்காய்-1 தேக்கரண்டி.

வெல்லம்-1/2 கப்.

கருப்பு எள்-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

கந்தர் அப்பம் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் 2 கப் பச்சரிசி, ¼ கப் உளுத்தம் பருப்பு, கொஞ்சம் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அரைத்த மாவுடன் 3 தேக்கரண்டி துருவிய தேங்காய், 1 ½ கப் வெல்லம், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறாமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான். சுவையான செட்டிநாடு கந்தர் அப்பம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தேங்காய் ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்;

ரவை-2 கப்.

சர்க்கரை-1/4 கப்.

துருவிய தேங்காய்-1 கப்.

நெய்-தேவையான அளவு.

திராட்சை-10

முந்திரி-10

பால்-2 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
சுவையான நெய்சோறு- சிதம்பரம் ஸ்பெஷல் கத்திரிக்காய் கொத்சு!
Sweet Chettinad Kandhar Appam-Coconut Rava Ladoo

தேங்காய் ரவா லட்டு செய்முறை விளக்கம்;

அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி நெய் விட்டு 1 கப் ரவை சேர்த்து வாசனை வரும்வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அதே  ஃபேனில் 1 கப் துருவிய தேங்காயை நன்றாக வறுக்கவும். இப்போது அதில் வறுத்து வைத்த ரவையையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது இத்துடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ¼ கப் பவுடர் செய்த சர்க்கரையை சேர்த்து கலந்துவிடவும். இத்துடன் திராட்சை10 , முந்திரி 10 நெய்யில் நன்றாக வறுத்தெடுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். கடைசியாக 2 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்துவிட்டு லட்டு பிடியுங்கள். அவ்வளவுதான். சுவையான தேங்காய் ரவா லட்டு தயார். நீங்களும் இதை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com