இன்றைக்கு செம டேஸ்டான பீட்ரூட் இடியாப்பம் மற்றும் முருங்கை அடை தோசை ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பீட்ரூட் இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்;
பீட்ரூட்-2 கப்.
இடியாப்ப மாவு-1 கப்.
உப்பு- தேவையான அளவு.
நெய்-1 தேக்கரண்டி.
பீட்ரூட் இடியாப்பம் செய்முறை விளக்கம்;
முதலில் பீட்ரூட்டை நறுக்கி 2 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பீட்ரூட் ஜூஸ்ஸை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இந்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் 1 தேக்கரண்டி, பீட்ரூட் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து மாவை நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும். இந்த மாவை ஒரு 5 நிமிடம் ஊற வைத்துவிட்டு பிறகு எடுத்து இடியாப்ப அச்சியில் மாவை போட்டு இட்லி தட்டில் பிழிந்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் இடியாப்பம் தயார். இதில் தேங்காய் பால், வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
முருங்கை அடை செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி-2 கப்.
துவரப்பருப்பு-1 கப்.
கடலைப்பருப்பு-1 கப்.
உளுந்து-1கப்.
வரமிளகாய்-5
சோம்பு-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
தாளிக்க,
எண்ணெய்-சிறிதளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1 கப்.
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
மஞ்சள்தூள்-சிறிதளவு.
முருங்கைக்கீரை-1கப்.
உப்பு-தேவையான அளவு.
நெய்-1 தேக்கரண்டி.
முருங்கை அடை செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி 2 கப், துவரம் பருப்பு 1 கப், கடலைப்பருப்பு 1 கப், உளுந்து 1 கப் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதில் வரமிளகாய் 5, பூண்டு 3, சோம்பு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, பெருங்காயத்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு முருங்கைக்கீரை 1 கப், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் அடை மாவில் சேர்த்துக்கொள்ளவும்.
மாவை நன்றாக கலந்துவிட்டு, அடுப்பில் தோசைக்கல் வைத்து நெய் 1 தேக்கரண்டி சேர்த்து மாவை 1 கரண்டி ஊற்றி அடை பக்குவத்தில் வார்த்து நெய் ஊற்றி பொன்முறுவலாக இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான முருங்கை அடை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.