இன்றைக்கு சுவையான ரோஸ்மில்க் கேசரி மற்றும் அப்பளம் சம்மந்தி ரெசிபிஸை சிம்பிளா வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ரோஸ்மில்க் கேசரி செய்ய தேவையான பொருட்கள்;
நெய்-1கப்.
முந்திரி-10
திராட்சை-10
ரவை-1கப்.
தண்ணீர்-2கப்.
ரோஸ்மில்க் எசென்ஸ்-1 தேக்கரண்டி.
சர்க்கரை-1கப்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
நெய்-1தேக்கரண்டி.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
மெலன் விதைகள்-தேவையான அளவு.
ரோஸ்மில்க் கேசரி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் நெய் 1 கப் சேர்த்துக் கொள்ளவும். இதில் முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் 1 கப் ரவையை 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
இப்போது இதில் 2 கப் சூடான தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். ரவை நன்றாக வேகும்போதே இதில் ரோஸ்மில்க் எசென்ஸ் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
கட்டியில்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும். ரவை நன்றாக வெந்த பிறகு 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இப்போது 5 நிமிடம் நன்றாக கலந்துவிடவும். கேசரி கொஞ்சம் கெட்டியாக நொடங்கியதும் காய்ச்சிய 1 தேக்கரண்டி எண்ணெய், நெய் 1 தேக்கரண்டி, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
கேசரி சிறிது நேரத்திற்கு பிறகு கேக் போல மாறாமல் இருக்கவே எண்ணெய் சேர்க்க வேண்டும். கடைசியாக, மெலன் விதைகளை தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான ரோஸ்மில்க் கேசரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
அப்பளம் சம்மந்தி செய்ய தேவையான பொருட்கள்;
அப்பளம்-3
வரமிளகாய்-8
புளி-1துண்டு.
இஞ்சி-1 துண்டு.
கல் உப்பு-தேவையான அளவு.
கருவேப்பிலை-சிறிதளவு.
துருவிய தேங்காய்-1கப்.
சின்ன வெங்காயம்-15.
அப்பளம் சம்மந்தி செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு 3 அப்பளத்தை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது சிறிது எண்ணெய் விட்டு 8 வரமிளகாய்யை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இதை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ கல்உப்பு தேவையான அளவு, 1 துண்டு புளி, வறுத்த 8 வரமிளகாய், கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி 1 துண்டு, சின்ன வெங்காயம் 15, துருவிய தேங்காய் 1கப் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துவிட்டு இதனுடன் 3 அப்பளத்தை சேர்த்து அரைத்து எடுத்தால் அப்பளம் சம்மந்தி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.