இன்றைக்கு மிகவும் சுவையான சாட் வகையான இனிப்பும், புளிப்பும் கலந்த மசாலா கார்ன் சாட் மற்றும் டேஸ்டியான மாவா பர்பி ரெசிபிஸை எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் என்று பார்ப்போம்.
மசாலா கார்ன் சாட் செய்ய தேவையான பொருட்கள்;
சோளம்-2கப்.
மஞ்சள் தூள்-1 சிட்டிகை
வெங்காயம்-1/2 கப்.
தக்காளி-1/2 கப்.
பச்சை மிளகாய்-1
கொத்தமல்லி- சிறிதளவு.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
சாட் மசாலா-1/2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
எழுமிச்சை சாறு-1/2 மூடி.
வெண்ணெய்-1 தேக்கரண்டி.
மிக்ஸர்- சிறிதளவு.
துருவிய சீஸ்- சிறிதளவு.
மசாலா கார்ன் சாட் செய்முறை விளக்கம்;
முதலில் சோளத்தில் மஞ்சள்தூள் 1 சிட்டிகை சேர்த்து 30 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 2 கப் வேகவைத்த சோளம், சிறிதாக நறுக்கிய வெங்காயம் ½ கப், சிறிதாக நறுக்கிய தக்காளி ½ கப், பொடியாக நறுக்கிய மிளகாய் 1, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளவும்.
இப்போது இதில் மிளகாய்த்தூள் ½ தேக்கரண்டி, சாட் மசாலா ½ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, எழுமிச்சை சாறு ½ மூடி, வெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து விட்டு மேலே மிக்ஸர், துருவிய சீஸ், கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான். சுவையான மசாலா கார்ன் சாட் தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
மாவா பர்பி செய்ய தேவையான பொருட்கள்;
நெய்-1 தேக்கரண்டி.
இனிப்பில்லாத பால் கோவா-250 கிராம்.
சர்க்கரை-50 கிராம்.
பால் பவுடர்-50 கிராம்.
பால்-1/2 லிட்டர்.
ஏலக்காய்-1/2 தேக்கரண்டி.
பாதாம், பிஸ்தா- சிறிதளவு.
மாவா பர்ஃபி செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் விட்டுக் கொள்ளவும். இப்போது அதில் இனிப்பில்லாத பால் கோவா 250 கிராம், சர்க்கரை 50 கிராம் சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது இதில் பால் பவுடர் 50 கிராம், பால் ½ கப், ஏலக்காய் பவுடர் ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக திரண்டு வரும் வரை கிண்டவும்.
இப்போது ஒரு டிரேயில் நெய் தடவி அதில் பர்பியை சேர்த்து நன்றாக சமன் படுத்திக் கொள்ளுங்கள். அதன் மீது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தாவை தூவி பர்பியை ஆறவிட்டு சிறுதுண்டுகளாக வெட்டி எடுக்கவும். அவ்வளவு தான். டேஸ்டியான மாவா பர்பி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.