ஆடி மாத ஸ்பெஷல் ராகி கூழ்-கசகசா பாயசம் செய்யலாம் வாங்க!

கசகசா பாயசம் - ராகி கூழ்...
கசகசா பாயசம் - ராகி கூழ்...Image credit - youtube.com
Published on

ன்னைக்கு ஆடிமாத ஸ்பெஷலான ராகி கூழ் மற்றும் கசகசா பாயசத்தை எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

ராகி கூழ் செய்ய தேவையான பொருட்கள்;

ராகி மாவு-1 கப்.

உப்பு- தேவையான அளவு.

அரைத்த அரிசி -1 தேக்கரண்டி.

தயிர்-1 கப்.

இஞ்சி-சிறிதளவு.

வெங்காயம்- சிறிதளவு.

மாங்காய்- சிறிதளவு.

பச்சை மிளகாய்- சிறிதளவு.

ராகி கூழ் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் ¼ கப் ராகி மாவு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். இதை நன்றாக புளிக்க விடவும்.

அரிசியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் 1 கப் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் 1 தேக்கரண்டி அரிசியை சேர்த்து வேகவிடவும். இப்போது இதில் கரைத்து வைத்திருக்கும் ராகி மாவை சேர்த்து நன்றாக வழவழப்பாக ஆகும் வரை அடுப்பில் வைத்துக் கிண்டவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் 1 கப் தயிர் சேர்த்து அதில் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து அதை செய்து வைத்திருக்கும் ராகியில் சேர்த்து நன்றாக கிண்டவும்.

கடைசியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மாங்காய், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதன் மீது தூவி பரிமாறவும். அம்மனுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம். இது உடம்புக்கும் மிகவும் குளுமையாகும். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

கசகசா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்;

பேஸ்ட் செய்ய,

கசகசா-1 தேக்கரண்டி.

முந்திரி-5

அரிசி-1/2 தேக்கரண்டி.

துருவிய தேங்காய்-1 கப்.

பால்- ½ கப்.

பாயாசத்திற்கு,

வெல்லம்-1கப்.

முந்திரி-10

திராட்சை-10

நெய்-2 தேக்கரண்டி.

குங்குமப்பூ-சிறிதளவு.

ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.

பால்-1 கப்.

பச்சை கற்பூரம் -1 சிட்டிகை.

இதையும் படியுங்கள்:
சுவையான Tender coconut falooda மற்றும் கொல்கத்தா ஸ்டைல் ஜால் முரி செய்யலாம் வாங்க!
கசகசா பாயசம் - ராகி கூழ்...

கசகசா பாயாசம் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு கடாயில் 1 தேக்கரண்டி கசகசா, 5 முந்திரி, அரிசி ½ தேக்கரண்டி, 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் ¼ கப் பால் ஊற்றி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். மறுபடியும்  ¼ கப் பால் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லம் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் விட்டு 10 முந்திரி, 10 திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இதில் அரைத்து வைத்த பேஸ்டை சேர்த்து ஒரு கொதி வரும் வரை விட்டு அதில் கரைத்து வைத்த வெல்ல தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். இதில் ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி, 1 சிட்டிகை பச்சை கற்பூரம், 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கிண்டிக்கொள்ளவும். இதில் பால் 1 கப் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிண்டி பரிமாறவும். இந்த பாயாசம் நெய் வைத்தியத்திற்கு மட்டுமில்லாமல் வாய்ப் புண்ணிற்கும் நல்ல மருந்து. நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com