சுவையான Tender coconut falooda மற்றும் கொல்கத்தா ஸ்டைல் ஜால் முரி செய்யலாம் வாங்க!

Tender coconut falooda
Tender coconut falooda and jal moori recipesImage Credits: Rashida Blogs
Published on

ன்னைக்கு சுவையான ஸ்னாக்ஸ்களான Tender coconut falooda மற்றும் ஜால் மூரி ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Tender coconut falooda செய்ய தேவையான பொருட்கள்;

அகர் அகர்- 5 கிராம்.

சர்க்கரை-80 கிராம்.

இளநீர்-500ml.

சப்ஜா விதை-1 தேக்கரண்டி.

சேமியா-50கிராம்.

துருவிய இளநீர் வழுக்கை-1கப்.

வெண்ணிலா ஐஸ்கிரீம்-1 ஸ்கூப்.

Tender coconut falooda செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 5 கிராம் அகர் அகர் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும். அதில் சர்க்கரை 80 கிராம் சேர்த்துக் கொள்ளவும். சக்கரை நன்றாக கரைந்ததும் அதில் 500 ml இளநீர் சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும்.

இப்போது 1 தேக்கரண்டி சப்ஜா விதையில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் சேமியா 50 கிராம் சேர்த்து நன்றாக வெந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இளநீர் வழுக்கையை துருவி எடுத்துக் கொள்ளவும். ஜெல்லியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கண்ணாடி கிளேசில் செய்து வைத்திருக்கும் ஜெல்லியை 1 தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு அதில் சேமியா 1 தேக்கரண்டி, சப்ஜா விதை 1 தேக்கரண்டி துருவி வைத்திருக்கும் இளநீர் வழுக்கை 1 தேக்கரண்டி, வெண்ணிலா ஐஸ்கிரீம் 1 ஸ்கூப் சேர்த்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான Tender coconut falooda தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.

கொல்கத்தா ஸ்டைல் ஜால் முரி செய்ய தேவையான பொருட்கள்:

பொரி-1 கப்.

கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.

சாட் மசாலா-1/4 தேக்கரண்டி.

ஜீரகத்தூள்-1/4 தேக்கரண்டி.

மெங்கோ பவுடர்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

சில்லி பிளேக்ஸ்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

பொடியாக நறுக்கிய தக்காளி-1 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி- சிறிதளவு.

எழுமிச்சை ஜூஸ்-1/2 மூடி.

தட்டை-சிறிதளவு.

வேகவைத்து பொடியாக வெட்டிய உருளை – ½ கப்.

கடுகு எண்ணெய்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
செட்டிநாடு புளிமிளகாய் மண்டி - உடுப்பி ஸ்பெஷல் குருமா செய்யலாம் வாங்க!
Tender coconut falooda

கொல்கத்தா ஸ்டைல் ஜால் முரி செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பெரிய பவுலில் 1 கப் பொரி எடுத்துக் கொள்ளவும். அதில் ¼ தேக்கரண்டி சாட் மசாலா, ¼ தேக்கரண்டி கரம் மசாலா, ¼ தேக்கரண்டி ஜீரகத்தூள், ½ தேக்கரண்டி மேங்கோ பவுடர், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.

ஜால் முரி
ஜால் முரி Image credit - youtube.com

இப்போது அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய தக்காளி 1 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு, எழுமிச்சை ஜூஸ் ½ மூடி பிழிந்து விடவும். இப்போது நன்றாக கிண்டி விடவும்.

இத்துடன் தட்டையை உடைத்து தூவிக்கொள்ளவும். வேகவைத்த பொடியாக நறுக்கிய உருளை ½ கப் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கடுகு எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கிண்டி பரிமாறவும். நீங்களும் ஈவ்னிங் ஸ்னாக்ஸூக்கு இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com