மணக்க மணக்க ஆப்கானி பன்னீர் கிரேவி- பலாக்கொட்டை முட்டை பொடிமாஸ் செய்யலாம் வாங்க!

பன்னீர் கிரேவி...
பன்னீர் கிரேவி...Image credit - youtube.com

ன்னைக்கு சுவையான ஆப்கான் பன்னீர் கிரேவி மற்றும் பலாக்கொட்டை முட்டை பொடிமாஸ் ரெசிப்பியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

ஆப்கானி பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

வெங்காயம்-1

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-5

மிளகு-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

தயிர்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

ஜீரகத்தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

பிரஸ் கிரீம்-1 கப்.

பட்டை-1

கிராம்பு-1

பிரியாணி இலை-1

ஏலக்காய்-1

எண்ணெய்- தேவையான அளவு.

பன்னீர் ப்ரைக்கு,

உப்பு- சிறிதளவு.

மிளகுத்தூள்-சிறிதளவு.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி.

ஆப்கானி பன்னீர் கிரேவி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு ஃபேனில் சிறிது எண்ணெய் விட்டு அதில் மிளகு 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 5, பச்சை மிளகாய் 2 ஆகியவற்றை நன்றாக வதக்கி அடுப்பை ஆப் செய்துவிட்டு கொத்தமல்லி சிறிது, தயிர் 1 கப், உப்பு தேவையான அளவு சேர்த்த தண்ணீர் சிறிது விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்து எடுத்து வைத்திருக்கும் கலவையில் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, ஜீரகத்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி அதில் பட்டை 1, ஏலக்காய் 1, கிராம்பு 1, பிரியாணி இலை 1 சேர்த்துக் கொள்ளவும். இதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை 15 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிண்டவும். கடைசியாக பிரஸ் கிரீம் 1கப் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது வெட்டி வைத்திருக்கும் பன்னீரில் உப்பு சிறிதளவு , இஞ்சிபூண்டு விழுது  ¼ தேக்கரண்டி, மிளகுத்தூள் சிறிதளவு  தூவி நன்றாக கலந்துவிட்டு இப்போது ஒரு ஃபேனில் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் பன்னீர் நன்றாக பொன்னிறமாக வறுப்பட்டதும் எடுத்து விடவும். இப்போது இந்த பன்னீரை கிரேவியில் சேர்த்து கிண்டியிறக்கவும். அவ்வளவு தான் சுவையான ஆப்கான் பன்னீர் கிரேவி தயார். நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

பலாக்கொட்டை முட்டை பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை-1கப்.

மஞ்சள் தூள்-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

முட்டை-2

மசாலா செய்வதற்கு,

மிளகு- சிறிதளவு.

பூண்டு-5.

தேங்காய்-1/2 கப்.

கருவேப்பிலை-சிறிதளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்- 1தேக்கரண்டி.

பலாக்கொட்டை முட்டை பொடிமாஸ் செய்முறை விளக்கம்.

முதலில் 1கப் பலாக்கொட்டையை தோலுரித்து சின்ன சின்னதாக வெட்டி தண்ணீரில் மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மக்கனா பாயாசம் - வாழைப்பழ தோசை செய்யலாம் வாங்க!
பன்னீர் கிரேவி...

இப்போது கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றிக் கொண்டு கடுகு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, ஜீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து வேக வைத்த பலாக்கொட்டை, 2 முட்டையை உடைத்து ஊற்றிக்கொண்டு இதற்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.

இப்போது மிக்ஸியில் தேங்காய் துண்டு ½ கப், பூண்டு 5, மிளகு சிளிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை முட்டையுடன் சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு 2 நிமிடம் மூடிவைத்து கடைசியாக கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான். சுவையான பலாக்கொட்டை முட்டை பொடிமாஸ் தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com