சூப்பர் சுவையில் மக்கனா பாயாசம் - வாழைப்பழ தோசை செய்யலாம் வாங்க!

Makhana payasam
Makhana payasam and banana dosa recipesImage Credits: Times of India
Published on

ன்னைக்கு சுவையான மக்கனா பாயாசம் மற்றும் வாழைப்பழ தோசை செய்ய போகிறோம். சரி வாங்க இந்த ரெசிபியை எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்னு பாக்கலாம்.

மக்கனா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்;

மக்கனா-1கப்.

சக்கரை-1கப்.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

குங்குமப்பூ-சிறிதளவு.

நெய்- தேவையான அளவு.

முந்திரி-10

பால்-1/2 லிட்டர்.

சேமியா-1/4 கப்.

மக்கனா பாயாசம் செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து 1 கப் மக்கனாவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதில் பாதியை வைத்துக் கொண்டு மீதி பாதியை மிக்ஸியில் அரைத்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் பால் ½ லிட்டர் போட்டு காயவைத்து எடுத்துக்கொள்ளலாம். அதில் சிறிது பாலை எடுத்து குங்குமப்பூ போட்டு ஊறவைத்து வைத்துவிடவும். இப்போது காய வைத்த பாலில் ¼ கப் சேமியா, வறுத்த மக்கனாவை சேர்த்து கலந்துவிட்டு வேகவைக்கவும். இப்போது 1 கப் சக்கரை சேர்த்துவிட்டு அதிலே பவுடர் செய்து வைத்த மக்கனா, குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும். இத்துடன் ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கிண்டி விடவும்.

இப்போது ஒரு ஃபேனில் கொஞ்சமாக நெய் சேர்த்து 10 முந்திரி வறுத்து சேர்த்துக்கொள்ளவும். இப்போது பாயாசத்தை நன்றாக கலக்கிவிட்டு பவுலில் ஊற்றி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மக்கனா பாயாசம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்.

வாழைப்பழ தோசை செய்ய தேவையான பொருள்;

வாழைப்பழம்-2

வெல்லம்-1கப்.

துருவிய தேங்காய்-1கப்.

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய முந்திரி-10.

பேக்கிங் பவுடர்-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

பால்-1கப்.

கோதுமை மாவு-1கப்.

நெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான மோத்திசூர் லட்டு - ஹனி சில்லி பொட்டேடோ செய்யலாம் வாங்க!
Makhana payasam

வாழைப்பழ தோசை செய்முறை விளக்கம்;

முதலில் இரண்டு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு அதை சின்ன சின்ன தூண்டுகளாக வெட்டி ஒரு பவுலில் சேர்த்துக்கொள்ளவும். இதில் 1கப் வெல்லம், 1 கப் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய முந்திரி 10, பேக்கிங் பவுடர் ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

இப்போது இதில் கோதுமை மாவு 1 கப் சேர்த்து, பால் 1கப் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். தோசை மாவு பதத்திற்கு வந்ததும் அதை 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் 1 தேக்கரண்டி ஊற்றிவிட்டு மாவை குட்டி குட்டியாக தோசை போல ஊற்றவும். அதன் மீது நெய்விட்டு நன்றாக வேகவிடவும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் வாழைப்பழ தோசையை ஒரு பிளேட்டில் மாற்றி மேலே துருவிய தேங்காய் தூவி பரிமாறவும். அவ்வளவுதான். சுவையான வாழைப்பழ தோசை தயார். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com