Badhushah and beetroot kheer
Badhushah and beetroot kheer

பேக்கரி ஸ்டைல் பாதுஷா-பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம் செய்யலாம் வாங்க!

Published on

ன்னைக்கு சுவையான பேக்கரி ஸ்டைல் பாதுஷா மற்றும் பீட்ரூட் பாயாசம் எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

பேக்கரி ஸ்டைல் பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு-1 கப்.

நெய்-1 கப்.

பேக்கிங் சோடா-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

சக்கரை-1கப்.

ஏலக்காய்-4

பேக்கரி ஸ்டைல் பாதுஷா செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் மைதாமாவு 1 கப், பேக்கிங் பவுடர் ¼ தேக்கரண்டி, நெய் 1 கப், உப்பு தேவையான அளவு, தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவிலே ஓட்டையிட்டு எண்ணெய்யை சுட வைத்து நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2கப் சக்கரை 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக பாகு பதத்திற்கு கொதிக்க விட்டு ஏலக்காய் 4 சேர்த்து கடைசியாக செய்து வைத்திருக்கும் பாதுஷாவை சேர்த்து இறக்கிவிடவும். பாதுஷா பாகில் நன்றாக ஊறியதும் தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துவிடவும். அவ்வளவு தான் சுவையான பாதுஷா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிப்பியை வீட்டிலே முயற்சி பண்ணி பாருங்கள்.

பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி-1கப்.

சக்கரை-1கப்.

பீட்ரூட் -2 கப்.

ஏலக்காய்-1/2 தேக்கண்டி.

நெய்- தேவையான அளவு.

பால்-1 கப்.

முந்திரி -10

திராட்சை-10

இதையும் படியுங்கள்:
‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கப்படும் ப்ளூ பெர்ரி பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?
Badhushah and beetroot kheer

பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம் செய்முறை விளக்கம்:

முதலில் ஜவ்வரிசி 1 கப்பில் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.  இப்போது பீட்ரூட்டை நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும். அதில் பாதி பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அந்த சாறில் ஜவ்வரிசியை வேகவைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதில் மீதமிருக்கும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 1 கப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பீட்ரூட்டை நன்றாக வேகவிடவும். பீட்ரூட் நன்றாக வெந்ததும் ஜவ்வரிசியை அதில் சேர்க்கவும். இப்போது 1 கப் சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும். இத்துடன் ½ தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடைசியாக நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் பீட்ரூட் பாயசம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com