'ப்ளூ பெர்ரி' அடர்த்தியான நீலநிறத்தில் இருக்கும் சத்து மிகுந்த பழமாகும். இந்த பழத்தை ‘சூப்பர் ஃபுட்’ என்றும் அழைப்பார்கள். அதற்கு காரணம் இந்த பழத்தில் இருக்கும் Polyphenolic compounds ஆகும். அமேரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகளில் இந்த பழம் அதிகமாக விளைகிறது.
இந்த பழத்தை சாதாரணமாக வைப்பதற்கு பதில் உறைய வைத்து பயன்படுத்துவதன் மூலம் இதனுள் இருக்கும் சத்துக்களை வெகு காலம் பாதுகாக்கலாம். ப்ளூ பெர்ரியில் அதிக அளவில் விட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதில் அதிகமாக விட்டமின் K உள்ளதால் இதய சம்மந்தமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. மேலும் எலும்புகளின் ஆரோக்கியம், ரத்தத்தை உறைய வைக்க உதவுகிறது.
ப்ளூ பெர்ரியில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நம் உடலில் இருக்கும் ப்ரீ ரேடிக்கலிடமிருந்து பாதுகாக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளான முதுமையான தோற்றம், முகச்சுருக்கம், கோடுகள் போன்ற பிரச்னைகள் தீரும்.
இதயத்தில் அதிகமாக கொழுப்பு சேருவதால் கொலஸ்ட்ரால் பிரச்னை ஏற்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். ப்ளூ பெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இதயத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்.
தினமும் ப்ளூ பெர்ரி சாப்பிடுவதால், அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதை சரிசெய்யும். ப்ளூ பெர்ரியில் உள்ள Anthocyanins என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதன் நிறத்தை கொடுக்கிறது. அதுவே ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.
சர்க்கரை வியாதி இருப்பவர்கள் ப்ளூ பெர்ரி தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
ப்ளூ பெர்ரி ஒரு கப் எடுத்துக்கொள்வதால், தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய விட்டமின் சி இல் 25% கிடைத்துவிடுகிறது. Wild blueberries பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். இதில் சாதாரண ப்ளூ பெர்ரியை விட அதிக அளவில் anthocyanins இருக்கிறது. இது வயதான தோற்றம், கேன்சர், DNA இல் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யும். இதை சாப்பிடுவதால் மூளை செயல்பாடு அதிகரித்து நியாபக சக்தியும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. கடுமையான உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வு, வீக்கம் போன்றவற்றை ப்ளூ பெர்ரி சரிசெய்கிறது.