இன்று உலகம் முழுவதும் விரும்பி சாப்பிடப்படும் இனிப்பான ரசகுல்லாவை 1868ல் மேற்குவங்காளத்தை சேர்ந்த நோபின் சந்திரதாஸ் என்பவரே முதன்முதலில் செய்து விற்பனை செய்ய தொடங்கினார். இத்தகைய சிறப்பான ரசகுல்லாவை வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
பெங்காலி ஸ்பெஷல் ரசகுல்லா செய்ய தேவையான பொருள்;
பால்-1 ½ லிட்டர்.
எழுமிச்சை ஜூஸ்-2 பழம்.
சக்கரை-1கப்.
குங்குமப்பூ- தேவையான அளவு.
ஏலக்காய்-4.
பெங்காலி ஸ்பெஷல் ரசகுல்லா செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் பெரிய பாத்திரம் வைத்து அதில் 1 ½ லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பால் நன்றாக கொதித்த பிறகு அதில் 2 எழுமிச்சைப்பழத்தில் இருந்து பிழிந்து எடுத்த ஜூஸை ஊற்றவும். இப்போது பால் நன்றாக திரிந்து வரும். ஒரு வெள்ளை துணியில் தண்ணீரை சுத்தமாக பிழிந்து வடிகட்டிவிட்டு பன்னீரை மட்டும் எடுத்து 30 நிமிடம் கெட்டியாக வெள்ளை துணியில் கட்டி வைத்துவிடவும். பிறகு பன்னீரை நன்றாக கைகளால் 15 நிமிடம் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் சக்கரைக்கு 2½ கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். வாசனைக்கு 4 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும். சக்கரை நன்றாக கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். அவ்வளவு தான் இறக்கி வைத்து விடலாம். ரசக்குல்லா நன்றாக ஜூஸியாக ஆவதற்கு அரை மணி நேரம் பாகில் ஊற வேண்டும். கடைசியாக ரசகுல்லா மீது குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும். சுவையான பெங்காலி ஸ்பெஷல் டெசர்ட் ரசகுல்லா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
நேந்திரம் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்;
நேந்திரம் வாழைக்காய்-4
உப்பு-1 தேக்கரண்டி.
மஞ்சள்-1/2 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு.
நேந்திரம் சிப்ஸ் செய்முறை விளக்கம்;
முதலில் நேந்திரம் வாழைக்காயை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் 1 தேக்கரண்டி உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து பொரிக்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்ததும் தோலுரித்து வைத்த வாழைக்காயை மெலிதாக ஸ்லைஸ் செய்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அத்துடன் கரைத்து வைத்திருக்கும் மஞ்சள் தண்ணீரையும், உப்பையும் ஒவ்வொரு தேக்கரண்டியாக விட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்பெஷல் நேந்திரம் சிப்ஸ் தயார். இதை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே டிரை பண்ணி பாருங்கள்.