சுவையான ரவா பொங்கல் வித் மசாலா வடை குழம்பு செய்யலாம் வாங்க!

Rava pongal
Rava pongalImage credit-yummytummyaarthi.com

ப்போதும் செய்யும் பொங்கல் போல இல்லாமல் இன்னைக்கு வித்தியாசமாக ரவாவில் பொங்கல் செய்துவிட்டு மசாலா வடையை வைத்து சட்டுன்னு ஒரு குழம்பு வீட்டிலேயே சிம்பிளாக செய்யலாம் வாங்க.

ரவா பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்;

பாசிப்பருப்பு-1/4 கப்.

நெய்- தேவையான அளவு.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதறவு.

இஞ்சி-1 துண்டு.

முந்திரி-10.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

ரவை-1/2 கப்.

ரவா பொங்கல் செய்முறை விளக்கம்;

முதலில் ¼ கப் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு ஃபேனில் நெய் 2 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி,மிளகு 1 தேக்கரண்டி, துருவிய இஞ்சி 1 துண்டு, முந்திரி10, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் சிறிதளவு இதையெல்லாம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு விட்டு இப்போது வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு, 1/2கப் ரவை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக நெய் 4 தேக்கரண்டி விட்டு கிண்டி இறக்கவும். இப்போது சுவையான ரவா பொங்கல் தயார். நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டிலே செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

மசாலா வடை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மசால்வடை செய்ய,

கடலைப்பருப்பு-1 கப்.

உப்பு- தேவையான அளவு.

பெருங்காயம்-2 சிட்டிகை.

தட்டிய பூண்டு-4

சோம்பு-1/2 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1

வெங்காயம்-1

எண்ணெய்- தேவையான அளவு.

குழம்பு செய்ய,

கடுகு-1/2 தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

வெங்காயம்-1

தக்காளி-2

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.

தனியா தூள்-1/2 தேக்கரண்டி.

குழம்பு மிளகாய்தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மசாலா வடை குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் 1 கப் கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 2 சிட்டிகை பெருங்காயம், தட்டிய பூண்டு  4,  சோம்பு ½ தேக்கரண்டி, சிறிதாக வெட்டிய வெங்காயம் 2, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 சேர்த்து நன்றாக பிசைந்து குட்டி குட்டி வடையாக தட்டி நன்றாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு வேகவிட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பேக்கரி ஸ்டைல் பாதுஷா-பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம் செய்யலாம் வாங்க!
Rava pongal

இப்போது அடுப்பில் கடாயை வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு ½ தேக்கரண்டி, சோம்பு ½ தேக்கரண்டி சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய தக்காளி 2, உப்பு தேவையான அளவு, ½ தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி தனியா தூள், குழம்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். குழம்பிலிருந்து எண்ணெய் நன்றாக பிரிந்து வரும்போது செய்து வைத்திருக்கும் மசால் வடையை குழம்பில் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். இப்போது சுவையான மசாலா வடை குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com