
இன்றைக்கு சுவையான முந்திரி பகோடா மற்றும் முட்டை மிட்டாய் ரெசிபியை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
முந்திரி பகோடா செய்ய தேவையான பொருட்கள்.
கடலை மாவு-1 கப்.
அரிசி மாவு-1/2 கப்.
மிளகாய் தூள்-3 தேக்கரண்டி.
சோம்பு தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-1கைப்பிடி.
கொத்தமல்லி-1 கைப்பிடி.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
முந்திரி-200 கிராம்.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
முந்திரி பகோடா செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் கடலை மாவு, ½ கப் அரிசி மாவு, 3 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சோம்பு தூள், 1 தேக்கரண்டி உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள், 200 கிராம் முந்திரியை பாதியாக உடைத்து வைத்து சேர்த்துக் கொள்ளவும். பகோடா மொறு மொறுவென இருக்க சூடன எண்ணெய் 1 குழிக்கரண்டி சூடுபண்ணி சேர்த்துக் கொள்ளவும். இதை கிளறிவிட்ட பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கெட்டியாக பகோடா பதத்திற்கு மாவை பிசைந்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நன்றாக சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவை விட்டு நன்றாக முந்திரி பகோடா பொன்நிறமாகும் வரை வைத்து எடுக்கவும். சுவையான மொறு மொறு முந்திரி பகோடா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
முட்டை மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்.
பால்-1 லிட்டர்.
பாதாம்-50 கிராம்.
முட்டை-6
சுகர் பவுடர்-200 கிராம்.
குங்குமப்பூ-சிறிதளவு.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
நெய்-4 தேக்கரண்டி.
நறுக்கிய முந்திரி, பாதாம்-தேவையான அளவு.
முட்டை மிட்டாய் செய்முறை விளக்கம்.
முதலில் 1 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து கோவா பதத்திற்கு வரும் வரை சுண்ட வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம் 50 கிராமை சிறிது பால் விட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது பவுலில் 6 முட்டையை எடுத்துக்கொண்டு அதில் 200 கிராம் சுகர் பவுடரை சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும். இப்போது இதில் செய்து வைத்திருக்கும் கோவாவையும், அரைத்து வைத்திருக்கும் பாதாம் பேஸ்ட் அத்துடன் கொஞ்சமாக குங்குமப்பூவையும் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். பிறகு ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இப்போது இதை ஃபேனுக்கு மாற்றி நெய் 4 தேக்கரண்டி விட்டு நன்றாக வேகும் வரை கலந்துவிடவும். ஒரு தட்டில் நெய் தடவி செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து மேலே கொஞ்சம் நெய்யும், முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கியதை தூவி ஒரு கடாயில் வைத்து 40 நிமிடம் மூடிப்போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான முட்டை மிட்டாய் தயார். இதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.